பல்லடம்;நுாற்றாண்டு பழமை வாய்ந்த பல்லடம் பொன்காளியம்மன் கோவில் திருப்பணிகளை துவங்க ஆயத்தமாகி வருகிறது.பல்லடம் வட்டாரத்தின் கீழ், 40க்கும் மேற்பட்ட கோவில்கள் திருப்பணி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.இதில், பல்லடம் பொன் காளி அம்மன் கோவிலும் ஒன்று.நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், பல்வேறு சமூகத்தினருக்கு சொந்தமானது. நீண்ட காலமாக, இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. தற்போது, கோவில் திருப்பணிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால், இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.செயல் அலுவலர் பிரேமா பேசுகையில், 'கோவிலுக்கு, 22 ஏக்கர் நிலம் உள்ளது. நகர பகுதியில் இருந்தும், கோவில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. நிலத்தை குத்தகைக்கு விடுவதால் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதனால், கோவில் நிலை உயர வாய்ப்பு உள்ளது. கொரோனா காலத்தில், கோவில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது. அந்தந்த கோவில் வருவாயை அந்த கோவில்களுக்கு மட்டுமே செலவிட முடியும். வட்டி கொண்டுதான் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் செய்யப்படுகிறது'' என்றார்.''அலுவலக கட்டடம், குடிநீர், சுற்றுச்சுவர், பெயின்டிங், கழிப்பிடம் உள்ளிட்ட வேலைகள் உள்ளன. முதலில் மதிப்பீடு செய்த பிறகு பணிகள் துவங்கினால் பிரச்னை இல்லை. ஏற்றுக் கொண்டபின் செலவு கூடினால் சிக்கல். சிறு சிறு குறைபாடுகளை சரி செய்தபின் திருப்பணி மேற்கொள்வது நல்லது'' என, திருப்பணி குழுவினர் கருத்து தெரிவித்தனர்.