'டிஜிட்டல்' மயமாகும் கோவில் காடுகள்

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
சென்னை-கோவில் காடுகள் குறித்த விபரங்களை, 'டிஜிட்டல்' முறையில் ஆவணப்படுத்தும் பணிகளை, வனத்துறை துவக்கியுள்ளது.தமிழகத்தில் காப்பு காடு, வன உயிரின காப்பகம் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழக வனப் பகுதிகளில் காணப்படும் அரிய வகை மரங்கள், தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிகளை வனத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.வனத்துறை

சென்னை-கோவில் காடுகள் குறித்த விபரங்களை, 'டிஜிட்டல்' முறையில் ஆவணப்படுத்தும் பணிகளை, வனத்துறை துவக்கியுள்ளது.

தமிழகத்தில் காப்பு காடு, வன உயிரின காப்பகம் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழக வனப் பகுதிகளில் காணப்படும் அரிய வகை மரங்கள், தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிகளை வனத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வனப்பகுதிகளுக்கு அப்பால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில் காடு, தோப்புகளில் அரிய வகை மரங்கள், தாவரங்கள் காணப்படுகின்றன.

இவற்றை பாதுகாப்பதில் வனத்துறையின் உதவி முக்கிய பங்காக உள்ளது.இதற்காக, தமிழகம் முழுதும் கோவில் காடு, தோப்புகள் இருப்பிடம், அமைப்பு குறித்த தகவல்களை டிஜிட்டல் முறையில் தொகுத்து ஆவணப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.இதனால், தமிழகத்தில் எந்தெந்த பகுதியில் கோவில் காடுகள் உள்ளன. அவற்றில் எந்த வகை தாவரங்கள் உள்ளன என்றவிபரங்களை அனைவரும் எளிதாக அறிய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X