இது உங்கள் இடம்: தமிழக மக்கள் ஞானசூன்யங்களா?

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (81) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:மா.மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நரிக்குறவர் வீட்டிலும், இருளர்கள் வீட்டிலும் சாப்பிட்டு, நான் விளம்பரம் தேடுவதாகச் சொல்கின்றனர். விளம்பரத்திற்கு ஆசைப்படுபவன் நான் அல்ல. 55 ஆண்டு பொது வாழ்வில், எனக்கு கிடைத்திருக்கும் பேரும், புகழுமே போதுமானது; அது, கரையாமல் இருந்தாலே
DMK, MK Stalin, Stalin, CM Stalin,திமுக,ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


மா.மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நரிக்குறவர் வீட்டிலும், இருளர்கள் வீட்டிலும் சாப்பிட்டு, நான் விளம்பரம் தேடுவதாகச் சொல்கின்றனர். விளம்பரத்திற்கு ஆசைப்படுபவன் நான் அல்ல. 55 ஆண்டு பொது வாழ்வில், எனக்கு கிடைத்திருக்கும் பேரும், புகழுமே போதுமானது; அது, கரையாமல் இருந்தாலே போதும். புதிதாக எனக்கு விளம்பரம் எதுவும் தேவையில்லை' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

'பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் காட்சியைப் பார்த்தால், அதிலே என் முகம் தெரியும். எண்ணற்ற திட்டங்களை, ஓராண்டில் நிறைவேற்றி வைத்துள்ளேன். அத்தனை திட்டங்களிலும் என் முகம் தெரியும்' என்றும் அவரே கூறியுள்ளார். அடடா! இவற்றில் மட்டுமா ஸ்டாலின் முகம் தெரிகிறது... 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என, இவர் சொன்னதை கேட்டு, ஏமாந்து போன மாணவர்களின் சோகமான முகத்திலும், மாதம், 1,000 ரூபாய் கிடைக்கும் என்று நம்பி ஓட்டு போட்டு, ஏமாற்றம் அடைந்த பெண்களின் வயிற்றெரிச்சலிலும், ஸ்டாலின் முகம் தெரிகிறதே...


latest tamil news



'டாஸ்மாக்' கடைகளில் விற்கும் சாராயத்தை குடித்து குடித்து, குடல் அழுகிப் பரலோகம் போன, குடிகாரர்களின் மனைவி, மக்கள் விடும் கண்ணீரிலும், ஸ்டாலினின் புன்னகை சிந்தும் முகம் தெரிகிறதே...'தாழ்த்தப்பட்ட மக்களின் காவலர்கள் நாங்களே' என்று சொல்லி, ஜனாதிபதி தேர்தலில், உயர் குடியில் பிறந்த யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கும் கபட நாடகத்தில் நடிப்போரின் முகமெல்லாம், ஸ்டாலின் தானே தெரிகிறார்!

இலவசங்களை நம்பி, இன்று வரை ஏழையாகவே இருப்போரின் முகத்திலும் முதல்வர் காட்சி தருகிறாரே... காமராஜர் காலத்தில் மந்திரிகளை வரவேற்று, 'மெகா சைஸ் விளம்பர பேனர்'கள் எல்லாம் வைத்ததில்லை. தற்போது, எந்த ஒரு நிகழ்ச்சிக்கு முதல்வர் சென்றாலும், பல மீட்டர் துாரத்திற்கு மெகா சைஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதெல்லாம் விளம்பரம் இல்லையா?

அத்துடன் தற்போது, தி.மு.க.,வினர் வைக்கும் விளம்பர பேனர்களில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியின் படங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. அண்ணாதுரையையும், ஈ.வெ.ரா.,வையும், இவர்கள் மறந்தே போய் விட்டனர். செய்வதை எல்லாம் செய்து விட்டு, நான் விளம்பரப் பிரியன் இல்லை; புதிதாக எனக்கு விளம்பரம் தேவையில்லை என்று முதல்வர் சொன்னால், அதை எல்லாம் நம்ப, தமிழக மக்கள் ஞானசூன்யங்களா என்ன?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
05-ஜூலை-202204:48:55 IST Report Abuse
sankaseshan உன் முதுகை முதுகை முதலில் சொரிஞ்சுக்கோ பின்பு பிறர் முதுகை சொறியலாம்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
05-ஜூலை-202202:07:50 IST Report Abuse
BASKAR TETCHANA அது தான் தலைவர் அந்த காலத்திலேயே சொல்லி விட்டார் திருடகே பாப்பா திருடாதே என்று. இப்படி திருடி திருடி தான் நீ மக பெரிய திருடன் என்று போகும் இடமெல்லாம் போஸ்டர் மூலமாக உன் முகம் தெரிகிறது.
Rate this:
Cancel
04-ஜூலை-202220:13:44 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்களாக இருக்கும்போது, நீங்கள் குறிப்பிட்ட அந்த உயர் ஜாதியினர் ஏன் தமிழர்களாக இருக்க முடியாது. தமிழ் நாட்டில் 85 சதவீதத்திற்கும் மேல் இந்துக்கள்தான் அதேபோல் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள்தான் அதனால் மதத்தால் தமிழ் இனத்தை பிரிக்க முடியாது அதனால் தமிழை அழிக்க முடியாது ஆனால் ஜாதியால் அதை சுலபமாக செய்ய முடியும் அத்தையை கட்டமைப்பு ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அந்த அரசியல் இங்கு அவ்வளவு சீக்கிரம் எடுபடாது காரணம் திராவிட கருத்தியல் இங்கு நன்கு வேரூன்றி உள்ளது. ஆகவே வட இந்திய மத அரசியலை கொண்டு இங்கு தமிழ்நாட்டில் காலூன்றிய பின் ஜாதி அரசியலையும் பின்புறமாக துணைக்கொண்டு தமிழை எளிதில் அழித்து விடலாம் என்ற ஐயம் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை அனுமதிக்கவில்லையோ என்னவோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X