இருவரை தாக்கிய புலியை சிறைபடுத்தியது வனத்துறை

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
கூடலுார்-முதுமலை எல்லையில் உள்ள, பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், இருவரை தாக்கி காயப்படுத்திய புலியை, வனத்துறையினர்மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள, கர்நாடக மாநிலம்,பந்திப்பூர் புலிகள் காப்பகம்அருகே லக்கிபுரா கிராமம் உள்ளது.இதை ஒட்டிய வனப்பகுதியில், நேற்று முன்தினம், மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாட்டை புலி தாக்கி
இருவர், தாக்கியது, புலி, சிறைப்படுத்தியது, வனத்துறை

கூடலுார்-முதுமலை எல்லையில் உள்ள, பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், இருவரை தாக்கி காயப்படுத்திய புலியை, வனத்துறையினர்மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள, கர்நாடக மாநிலம்,பந்திப்பூர் புலிகள் காப்பகம்அருகே லக்கிபுரா கிராமம் உள்ளது.இதை ஒட்டிய வனப்பகுதியில், நேற்று முன்தினம், மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாட்டை புலி தாக்கி கொன்றது. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த கவ்யப்பா, 55, ராஜேஷ், 50 ஆகியோரை புலி தாக்கியது. இருவரும் காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து, அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதற்கான பணி நேற்று அதிகாலை துவங்கியது. சாம்ராஜ் நகர் கலெக்டர்சாருலதாசோமன், பந்திப்பூர் தலைமை வன அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட எஸ்.பி., சிவகுமார் ஆகியோர் தலைமையில், வன ஊழியர்கள், மூன்று வளர்ப்பு யானைகள் உதவியுடன், கிராம வாழை தோட்டத்தில் பதுங்கி இருந்த புலியை, காலை 8:00 மணிக்கு சுற்றி வளைத்தனர்.அரசு கால்நடை டாக்டர் வெங்கடேஷ், மயக்க ஊசி செலுத்தினார்.

மயக்கம் அடைந்த புலியை மீட்டு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, புலியை கூண்டில் அடைத்து, வாகனம் மூலம், மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றனர்.வனத்துறையினர் கூறுகையில், ''பிடிப்பட்ட ஆண் புலிக்கு, 10 வயது இருக்கும். வசிப்பிடம் தொடர்பாக, மற்றொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில், அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X