நாடு பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது: காடேஸ்வரா சுப்பிரமணியம் பேச்சு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
மதுரை : ''நம் நாடு சில பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது ,''என, மதுரையில் நடந்த ஹிந்துக்களின் உரிமை மீட்பு பயண பிரசார கூட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.அவர் மேலும் பேசியதாவது: மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதை ஸ்டாலின் கைவிடும் வரை கவர்னரின் ஆலோசகர் என்று தான் அவரை அழைப்போம். ஆனால் அதுவரை அவரது ஆட்சி இருப்பது
Kadeswara Subramaniam, Hindu Munnani, DMK, காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்துக்களின் உரிமை மீட்பு பயணம்,ஹிந்து முன்னணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : ''நம் நாடு சில பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது ,''என, மதுரையில் நடந்த ஹிந்துக்களின் உரிமை மீட்பு பயண பிரசார கூட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது: மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதை ஸ்டாலின் கைவிடும் வரை கவர்னரின் ஆலோசகர் என்று தான் அவரை அழைப்போம். ஆனால் அதுவரை அவரது ஆட்சி இருப்பது சந்தேகம். அமைச்சர் செந்தில் பாலாஜி 40 எம்.எல்.ஏ., க்களை பிடித்து வைத்துள்ளார் என தகவல் வருகிறது. அப்படியென்றால் மஹாராஷ்டிராவிற்கு வந்த நிலை தமிழகத்திற்கும் வரும்.

இன்றைய ஆட்சியாளர்கள் மதுரை, தருமபுர ஆதினங்களை மிரட்டுகிறார்கள். ஆனால் கோயில்கள் முன்னுள்ள ஈ.வெ.ரா., சிலைகளை அகற்ற வேண்டும் என மன்னார்குடி ஜீயர் மிக தைரியமாக அறிக்கை விட்டுள்ளார். அதை பாராட்டுகிறேன். ஏதோ தமிழன்னை ஓவியம் தயாரிப்பதாக சொல்கிறார்கள். பாதிரியார் ஜகத் கஸ்பருக்கு தைரியம் இருந்தால் தமிழன்னை ஓவியத்தை 'சர்ச்' களில் மாட்டி வைக்கட்டும்.


latest tamil news




ஸ்டாலின் உடல்நலத்திற்காக 10 நாள் யாகம் நடத்த மனைவி ஏற்பாடு செய்வதாக அறிகிறேன். 2026க்குள் தி.மு.க., காணாமல் போகும். ஜூலை 31 ஹிந்துக்களின் உரிமை மீட்பு பயணம் முடியும் போது மதசார்பற்ற நாடு என இந்த அரசு அறிவிக்க வேண்டும், என்றார்.

மாநில செயலாளர்கள் முத்துக்குமார், சேவுகன், பொதுச் செயலாளர் கிஷோர் குமார், ஹிந்து வழக்கறிஞர் குழு மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் செல்வகுமார், தலைவர் அழகர்சாமி, பொதுச் செயலாளர் கலாநிதி மாறன், இணை அமைப்பாளர் ராஜேஷ் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-ஜூலை-202212:14:54 IST Report Abuse
pradeesh parthasarathy பிஜேபி ஆட்சியை அவுங்க ஆளுங்களே சொல்றாங்கோ ....
Rate this:
Cancel
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜூலை-202211:58:09 IST Report Abuse
ramesh உனக்கு நாக்குல சனி கூடிய சீக்கிரம் களி திங்க ரெடியா இரு
Rate this:
Cancel
Chandra - Chennai,இந்தியா
04-ஜூலை-202210:40:16 IST Report Abuse
Chandra ஆமாம் ஐயா .. ..இந்தியா பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X