அ.தி.மு.க., பொதுச் செயலராகிறார் பழனிசாமி; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு| Dinamalar

அ.தி.மு.க., பொதுச் செயலராகிறார் பழனிசாமி; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (25) | |
சென்னை-'' வரும், ௧௧ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். அனைத்து அதிகாரங்களுடன் கூடிய பொதுச்செயலர் பதவி உருவாக்கப்பட்டு, அதற்கு பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்,'' என, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சென்னையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அ.தி.மு.க.,வில், ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக, பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல்

சென்னை-'' வரும், ௧௧ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். அனைத்து அதிகாரங்களுடன் கூடிய பொதுச்செயலர் பதவி உருவாக்கப்பட்டு, அதற்கு பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்,'' என, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சென்னையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.latest tamil news


அ.தி.மு.க.,வில், ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக, பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல் வெடித்து, நீறுபூத்த நெருப்பாக உள்ளது. கடந்த மாதம், ௨௩ம் தேதி, சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பன்னீர்செல்வத்தை, பழனிசாமி தரப்பினர் அவமதித்தனர். கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட, 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்களையும் நிராகரித்ததாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். 'இரட்டை தலைமை வேண்டாம்; பொதுச் செயலர் என்ற ஒற்றை தலைமையை உருவாக்க வேண்டும்' என, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு, தமிழ்மகன் உசேனிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, வரும் ௧௧ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் தரப்பினர் தடை கோரினர்; தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை நேற்று, முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பார்வையிட்டனர். பின், விஸ்வநாதன் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை. தற்போது, தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர். அவர்கள் முடிவின்படி, சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பொதுக்குழு கூட்டம் கட்டாயம் நடைபெறும். அதில், எந்த சிக்கலும் இல்லை. பொதுக்குழு கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல, அனைத்து அதிகாரங்களும் உள்ள பொதுச் செயலர் பதவி உருவாக்கப்படும். பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்.


latest tamil newsபழனிசாமிக்கு, 99 சதவீதம் ஆதரவு உள்ளது. பன்னீர்செல்வத்திற்கு, 1 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது. சட்டவிதிகளை பின்பற்றி நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.அ.தி.மு.க.,வில், தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை. பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர். அவர்களுக்குள் ஒருமித்த கருத்தும் இல்லை; ஒற்றுமையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.'பொதுக்குழு நடக்காது'

முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் அளித்த பேட்டி:அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்ட பழனிசாமி தரப்பினருக்கு அதிகாரமில்லை. கடந்த முறை நடந்த பொதுக்குழுவில், '23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது' என, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவில்லை. நீதிபதிகள் கருத்தை புறக்கணித்து விட்டு, அவைத் தலைவர் தேர்வு நடந்தது; புதிதாக பொதுக்குழு கூட்ட தேதியையும் அறிவித்தனர்.பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்பி, எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும், ௧௧ம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பு இல்லை. ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான பன்னீர்செல்வம் ஒப்புதலின்றி, பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு, எங்களுக்கு சாதகமாகவே வரும். பழனிசாமி தரப்பு சர்வாதிகார மனநிலையோடு செயல்படுகிறது; இது, கண்டனத்துக்குரியது. இரட்டை தலைமை சர்ச்சையில் உள்ளதால், அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்கு தான் கட்சியை வழிநடத்த அதிகாரம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பொருளாளருக்கு போட்டி!

பொதுக்குழுவில், பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளார். இந்த பதவிக்கு, முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன் ஆகிய இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில், விஸ்வநாதனுக்கு பொருளாளர் பதவி வழங்க வாய்ப்புள்ளது.வன்னியர் சமுதாயத்திற்கு பொருளாளர் பதவி வேண்டும் என்று கேட்டு, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரும் முட்டி மோதுகின்றனர். இவர்களுக்கு, துணை பொதுச் செயலர், தலைமை நிலைய செயலர் போன்ற பதவிகளை வழங்க வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X