டிஜிட்டல் திருவிழாவில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பிரதமருடன் கலந்துரையாடல்

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
விருதுநகர் : குஜராத்தில் இன்று (ஜூலை 4) நடக்கும் டிஜிட்டல் திருவிழாவில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நால்வர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் பிரதமர் மோடி உடன் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெற்ற பயன் குறித்து கலந்துரையாடுகின்றனர்.இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இன்று(ஜூலை 4) குஜராத்தில் 'டிஜிட்டல்
Digital India Week 2022, PM Modi, Gujarat

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

விருதுநகர் : குஜராத்தில் இன்று (ஜூலை 4) நடக்கும் டிஜிட்டல் திருவிழாவில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நால்வர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் பிரதமர் மோடி உடன் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெற்ற பயன் குறித்து கலந்துரையாடுகின்றனர்.

இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இன்று(ஜூலை 4) குஜராத்தில் 'டிஜிட்டல் மஹோத்ஸவ்' நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனையில் சிறந்து விளங்கும் நபர்களை அழைத்து பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இதில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 7 பேர் தேர்வாகி உள்ளனர்.

அதில் சென்னையை சேர்ந்த மூவர், ராமநாதபுரத்தை சேர்ந்த இருவர், விருதுநகரை சேர்ந்த இருவர் என 7 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வங்கியில் முத்ரா கடன் பெற்று மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இதில் முழுக்க முழுக்க க்யூ.ஆர்., கோடு மூலம் பண பரிவர்த்தனை செய்கிறார்.


latest tamil newsஇதே போல் சாத்துார் கத்தாளம்பட்டியை சேர்ந்த ராமஜெயம், மீன்வளர்ப்புக்காக வங்கியில் கடன் பெற்று 'ரூபே கே.சி.சி., கார்டு' எனப்படும் விவசாயி கடன் அட்டை மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார். இதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த சிவநாதன், விக்னேஷ், சென்னையை சேர்ந்த அய்யனார், ராஜ்பாரத், பாபு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
04-ஜூலை-202211:04:42 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கண்டிப்பாக பலன் கொடுக்கும் விஷயம் இளநீர் கடை முதல் பலாப்பழ கடைகள் வரை போன் பெ நல்ல உபயோகமாக உள்ளது வங்கி கணக்கு ,சேமிப்பு போன்ற நல்ல விஷயங்கள் சிறுவியாபாரிக்கு கிடைக்கிறது ..அனைவரும் டிஜிட்டலுக்கு மாறவேண்டும் நாட்டை இன்னும் பல படுத்தவேண்டும்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
04-ஜூலை-202209:09:23 IST Report Abuse
சீனி டிஜிட்டல் சாதனையாளர்களை கெளரவிப்பது நல்ல விசியம் தான். கூகுள்பே கூட பயனுள்ளதாக இருக்கிறது. ஆ.பி.ஐ, அரசு ஊக்குவித்தாலும், வங்கிகள் டிஜிட்டல் சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு எப்படி பயன்படுத்துவது என உதவி செய்யலாம். அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் மிக அலட்சியமாக உள்ளனர், அது தான் நாட்டின் முக்கிய பிரச்சனையே. அதே போல் யூ.பி.ஐ பேமெண்ட் தவறான ஆட்களுக்கு சென்று விட்டால், திரும்ப பெறுவது கடினம். தவறான வகையில் பணம் வந்துள்ளது என தெரிந்தாலும் சிலர், பணத்தை திரும்ப அனுப்ப ஒப்புக் கொள்வதில்லை, அரசு எதோ இலவசமாக அனுப்புயுள்ளது என நினைக்கின்றனர். எனவே, தவறாக அனுப்பிய பணத்தை மீண்டும் திரும்ப பெற சட்டம் வரவேண்டும்.
Rate this:
Cancel
04-ஜூலை-202208:21:34 IST Report Abuse
Gopalakrishnan S பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்த விடியாத அரசு, டாஸ்மாக் விற்பனையை வளர்க்கவே முனைப்பு காட்டுகிறது !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X