வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த சக்கா கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் முஸ்லிம் பெண் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் இரண்டாம் கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இதில் கட்னி மாவட்டம் சக்கா கிராமத்தில் நடந்த தேர்தலில் ரஹிசா பேகம் என்பவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வெற்றி ஊர்வலத்தில் பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பினர்.

இது தொடர்பான வீடியோ வேகமாக பரவியது. இது பற்றி சக்கா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.