பட்டாசு தொழில் பாதுகாப்பு ஆய்வு செய்ய 11 பேர் குழு: நியமித்தது மத்திய அரசு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில்பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.2016 அக். 20 ல் சிவகாசியில் பட்டாசு கடையிலிருந்து லாரியில் பண்டல்களை ஏற்றிய போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது.அருகிலுள்ள ஸ்கேன் சென்டரில் தீ பரவி அங்கிருந்த 9 பேர் உயிரிழந்தனர். தீ, கடைகளுக்கு
பட்டாசு தொழில், பாதுகாப்பு, ஆய்வு, 11 பேர் குழு, மத்திய அரசு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில்பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.2016 அக். 20 ல் சிவகாசியில் பட்டாசு கடையிலிருந்து லாரியில் பண்டல்களை ஏற்றிய போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது.

அருகிலுள்ள ஸ்கேன் சென்டரில் தீ பரவி அங்கிருந்த 9 பேர் உயிரிழந்தனர். தீ, கடைகளுக்கு பரவியதில் 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து நாளிதழ்களில் வந்த செய்திஅடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாகவே வழக்கை எடுத்து விசாரித்தது.இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு விதிகளில் எதனை கடுமையாக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


latest tamil news





குழு நியமனம்



இதனைத் தொடர்ந்து மத்திய தொழில், வர்த்தக அமைச்சகம் 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லுாரி இயக்குனர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத் சிங், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியாசங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு,கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கணேசன், பட்டாசு வியாபாரிகள் சங்க பிரதிநிதி மணிக்ரோ, தனியார் நிறுவன செயல்அலுவலர் ஷா, பயர் ேசப்டி அசோசியேஷன் அஜித் ராகவன், மும்பை தேசிய பாதுகாப்புகவுன்சில் லலித்கோப் ஹனா, தமிழக அரசுவருவாய் துறை செயலாளர் ஆகியோர்உள்ளனர்.

இக்குழுவினர் பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடியபாதுகாப்பு, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-202209:44:32 IST Report Abuse
N Sasikumar Yadhav சிவகாசி பட்டாசு தொழில் சிறக்க இறைவன் அருள்புரியட்டும்
Rate this:
Cancel
04-ஜூலை-202208:17:15 IST Report Abuse
Gopalakrishnan S இதெல்லாம் மாநில அரசின் வேலை. பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்த விடியாத அரசு, ஒப்பந்தப்புள்ளிகளில் நாற்பத்தி ஐந்து சதவீதம் கொள்ளை அடிப்பதிலேயே குறியாய் உள்ளது. தில்லியில் இருந்து மோதிஜி செய்ய வேண்டிய நிலை !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X