சமாஜ்வாதியில் அனைத்து அமைப்புகளும் கலைப்பு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
லக்னோ : சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்து, அக்கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.மாநிலத்தில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்தது.சமீபத்தில் நடந்த இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், சமாஜ்வாதி தோல்வியடைந்தது. இந்த தொகுதிகள் சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளாக
சமாஜ்வாதி, அகிலேஷ் யாதவ், முதல்வர், யோகி ஆதித்யநாத்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ : சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்து, அக்கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்தது.சமீபத்தில் நடந்த இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், சமாஜ்வாதி தோல்வியடைந்தது. இந்த தொகுதிகள் சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளாக இருந்தன.

இதனால் கட்சி தலைமை அதிர்ச்சியடைந்தது.இந்நிலையில், ௨௦௨௪ லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்து, அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.


latest tamil news




இளைஞரணி குழுக்கள், மாணவர் அணி, மகளிர் அணி குழுக்கள், தேசிய மற்றும் மாநில தலைவர் உட்பட அனைத்து அமைப்புகளையும் கலைத்து அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து மாவட்ட பொறுப்புகளும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உ.பி., மாநில தலைவர் நரேஷ் உத்தம் படேல் பதவி மட்டும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
04-ஜூலை-202219:15:33 IST Report Abuse
அம்பி ஐயர் ஏக்நாத் ஷிண்டே ஞாபகம் வந்து போகுமில்ல.... அதான்
Rate this:
Cancel
04-ஜூலை-202218:41:32 IST Report Abuse
பேசும் தமிழன் அப்படியே கட்சியையும் கலைத்து விட்டு... உங்கள் கூட்டாளி யுடன்... பாகிஸ்தான் போய் விட்டால் மிகவும் நல்லது!!!
Rate this:
Cancel
04-ஜூலை-202218:30:39 IST Report Abuse
kulandai kannan இன்று உபியில் சமாஜ்வாதி, நாளை தமிழகத்தில் திராவிடவாதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X