பெரியாறு அணையை உடைக்க கேரளாவில் கையெழுத்து இயக்கம்; தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கூடலுார் : பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் சில அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கேரளாவில் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பத்து நாட்களாக பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பு கையெழுத்து இயக்கம் நடத்தி
பெரியாறு அணை, கேரளா, கையெழுத்து இயக்கம், தமிழக விவசாயிகள், எதிர்ப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கூடலுார் : பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் சில அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பத்து நாட்களாக பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பு கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.

பத்து லட்சம் கையெழுத்துக்கள் பெற்று பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ளதாக அதன் நிறுவனர் ரசல் ஜோய் தெரிவித்துள்ளார். பலமாக உள்ள பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


latest tamil news



அன்வர் பாலசிங்கம், நிர்வாகி, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கூறிய தாவது: பெரியாறு அணை பலமாக உள்ளது என 2006, 2014ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் செய்யப்படும் பிரசாரத்திற்கு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பு பிரசாரத்தை தடுக்க வேண்டும்.

தவறினால் தேவிகுளம், பீர்மேடு, உடுப்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை துவக்குவோம் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalasamy N - CHENNAI,இந்தியா
04-ஜூலை-202221:12:45 IST Report Abuse
gopalasamy N அதிமுக அரசு இருந்த வரை தமிழ்நாடு பாதுகாப்பாக இருந்தது திமுக அரசு உள்ளதால் இடதுசாரி கூட்டணி தைரியமாக அன்னையை உடைக்கும் மக்கள் திமுகவிருக்கு வோட்டு போட்டு சந்தோசமாக இருப்பர்
Rate this:
Cancel
chinnappan.r - Tirupur,இந்தியா
04-ஜூலை-202218:43:17 IST Report Abuse
chinnappan.r பெரியாறு அணை என்று தெளிவாக எழுதிய தினமலருக்கு மிக்க நன்றி. (இதுவரை பெரியார் அணை என்று பலரும் தவறாக எழுதிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது).
Rate this:
Cancel
04-ஜூலை-202217:27:25 IST Report Abuse
Tapas Vyas அதே விஷயத்துக்கு தமிழகத்தில் எத்தனை பேர் எதிர்பழபு தெரிவிக்கிறார்களென சர்வே செய்யுங்கள்-அதையே ப்ரமாண பத்திரமாக்கி சுப்ரீம் கோர்ட்டில் கேரள அக்கிரமத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யுங்கள்-இதில் முறை வழிப் பாசன விவசாயிகளின் சங்கங்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X