வேளச்சேரியில் 20 ஆயிரம் சதுர அடிநிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
வேளச்சேரி : வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், குழந்தைகள் மைய கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட, 20 ஆயிரம் சதுர அடி இடத்தை, சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்க, சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 1992ம் ஆண்டு
வேளச்சேரி, 20 ஆயிரம், சதுர அடி, ஆக்கிரமிப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


வேளச்சேரி : வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், குழந்தைகள் மைய கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட, 20 ஆயிரம் சதுர அடி இடத்தை, சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்க, சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு, குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர்தர வருவாய் பிரிவுகள் என, 1,786 மனைகள் உருவாக்கி விற்பனை செய்யப்பட்டன.மனை ஒதுக்கீடு நிபந்தனை, 14வது பாராவில், சாலை, குடிநீர், விளையாட்டு மைதானம், நுாலகம், பள்ளி, குழந்தைகள் மையம், கடைகள் மற்றும் சமூக கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் ஒதுக்கப்பட்ட மனை என குறிப்பிடப்பட்டு உள்ளது.


latest tamil news
குழந்தைகள் மைய கட்டடம் கட்ட, மூன்று பகுதிகளில், தலா 10 ஆயிரம் சதுர அடி பரப்பு வீதம் இடம் ஒதுக்கப்பட்டது. இதில், ஒரு இடம் வகைமாற்றம் செய்து மனையாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது.மீதமுள்ள இரண்டு இடங்கள், 2 மற்றும் 5வது தெருவில் உள்ளன. இந்த இடங்கள், சமூக நலத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆனால், குழந்தைகள் மையம் துவங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை சாதகமாக்கிய ஆக்கிரமிப்பாளர்கள், சில ஆண்டுக்கு முன், இந்த இரு இடங்களையும் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். அப்போது, சமூக ஆர்வலர்கள் தலையீட்டால், சமூக நலத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது, மேற்கண்ட இரு இடங்களையும் ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.குழந்தைகள் மைய கட்டடம் கட்டி, இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய மனையாக ஒதுக்கப்பட்டது. கல்விக்காக ஒதுக்கப்பட்ட சில இடங்கள், வகை மாற்றம் செய்து விற்பனை செய்யப்பட்டு உள்ளன.அதுபோல், சமூக நலத்துறைக்கு ஒதுக்கிய இடத்தை ஆக்கிரமித்து, வகை மாற்றம் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர்.இங்கு, ஏழை மக்கள் அதிகம் வசிப்பதால், குழந்தைகள் மையம் துவங்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம்.

சில சமூக நலத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, குழந்தைகள் மையம் துவங்குவதை கிடப்பில் போட்டுள்ளனர். மேற்கண்ட இரண்டு இடங்களும், பல கோடி ரூபாய் மதிப்புள்ளதால், எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்க வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து, சமூகநலத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஜூலை-202221:05:22 IST Report Abuse
Ramesh Sargam ஆக்கிரமிப்பது அநேகமாக ஆளும் கட்சியின் 'கண்மணிகளாகத்தான்' இருக்கும். அந்த கட்சியின் தலைவர் வாய் கிழிய கட்சி உறுப்பினர்களிடம் 'நீங்கள் தவறான பாதையில் சென்றால், நான் சர்வாதிகாரியாக மாறுவேன்' என்று வெறும் வாய்சவடால்தான் விடுவார். ஆனால், அவர்களுக்கு மறைமுகமாக உதவி புரிவார்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
04-ஜூலை-202219:48:00 IST Report Abuse
அம்பி ஐயர் ள்ஏற்கெனவே பத்தாயிரம் சதுர அடியை வகை மாற்றம் செய்து மனைகளாக மாற்றி விற்பனை செய்து விட்டனர்.... இது குற்றமில்லையா....??? இதுக்கு நடவடிக்கை கிடையாதா....??? என்ன விடியலோ.... அதான் இன்னும் நாலு வருஷம் இருக்கில்ல.... அதுக்குள்ளயும் மொத்தமா ஆக்கிரமிச்சு வித்துடலாம்.... இருக்கவே இருக்கு ஜி ஸ்கொயர் இல்லாட்டி பேரை மாத்தி க்ரீன் வேல்லின்னு மாத்திடலாம்....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
04-ஜூலை-202213:35:20 IST Report Abuse
raja வேற யாரு விடியலின் உடன்பிறப்பு திருட்டு திராவிடர்கள் தான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X