மாநில நல்லாசிரியர் விருது; முறைகேட்டை தடுக்க யோசனை

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை : தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதில், முறைகேடு மற்றும் அதிகாரிகளின் சிபாரிசுகளை தவிர்க்க, 'ஆன்லைன்' பதிவு அவசியம் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.குறுக்கீடுமுன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய - மாநில அரசுகள் சார்பில், அரசு மற்றும்
மாநில நல்லாசிரியர், விருது, முறைகேடு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதில், முறைகேடு மற்றும் அதிகாரிகளின் சிபாரிசுகளை தவிர்க்க, 'ஆன்லைன்' பதிவு அவசியம் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.


குறுக்கீடுமுன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய - மாநில அரசுகள் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு வழங்கும் விருதுக்கு, ஆசிரியர்களிடம் 'ஆன்லைனில்' விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


latest tamil news
இதில், விருப்பம் உள்ள ஆசிரியர்கள் அனைவரும், எந்த குறுக்கீடும் இல்லாமல், தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதனால், தகுதியான ஆசிரியர்கள் விருது பெறுவதை யாரும் தடுக்க முடியாது.ஆனால், மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை அமலில் இல்லை. மாறாக, தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் வழியாக, முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


பாரபட்சம்அதன்பின், முதன்மை கல்வி அலுவலர் வழியாக, மாநில கமிட்டிக்கு விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்படும். இந்த நடைமுறையில் பல்வேறு சிபாரிசு மற்றும் குறுக்கீடுகள் உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.குறிப்பாக, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரை தாண்டி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு விண்ணப்பங்கள் வருவதே, மிகப்பெரிய இலக்காக உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட அலுவலர்கள், விண்ணப்பங்களை மாநில குழுவுக்கு அனுப்புவதில், விருப்பு, வெறுப்பு அடிப்படையிலும், பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.எனவே, இந்த ஆண்டு தமிழகத்தில் தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள ஆசிரியர்கள் அனைவரும், நல்லாசிரியர் விருதுக்கு, நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில், ஆன்லைன் வழியில் விண்ணப்பங்களை பெற வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது. மத்திய அரசை போல், ஆன்லைன் வழியே ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பித்தால், தகுதியுள்ளவர்களுக்கு விருதுகள் கிடைக்கும் என, ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
04-ஜூலை-202219:39:21 IST Report Abuse
அம்பி ஐயர் கடந்த முப்பது வருடமாக எந்த ஒரு நல்லாசிரியருக்கும் விருது கொடுக்கப்படவில்லை..... விருது கொடுத்ததுல முக்கால்வாசி பேரு கழ்கத்துக்கு வேண்டியவங்க பணம் கொடுத்து வந்தவங்க தானே தவிர தகுதியுடையவங்க யாரும் இருக்க மாட்டாங்க ஓரிருவரைத் தவிர...
Rate this:
Cancel
04-ஜூலை-202217:15:45 IST Report Abuse
Tapas Vyas நல்லசிரியன் விருது கொடுத்ததனாலேதான் மாணவங்க தமிழ் பாடத்திலேயே பல்டிஃஅடிக்கிறானுக-போதாக்குறைக்கு பொம்பளைப் புள்ளைக அவனுகளோட சேந்மு குத்தாட்டம் போட்டு வீடியோவை ஏத்மி விடுதுக-இதுல நல்லாசிரியன்க எங்க இருக்கானுக.
Rate this:
Cancel
04-ஜூலை-202213:57:42 IST Report Abuse
ஆரூர் ரங் அந்த பேரல் லியோனி கூட நல்லாசிரியர்😉😉 விருது வாங்கியவர் என்கிறார்களே
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
04-ஜூலை-202215:19:11 IST Report Abuse
சீனிவிருதுக்கு முக்காடு போட்டுவிட்டு தான் கட்டிங் அடிப்பாராம், அவ்ளோ நல்லவர்ன்னு ஊர்ல பேசுறாங்க.... ஹாஹாஹா.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X