வழவழ சருமம் பெற.. என்ன செய்யலாம்?| Dinamalar

வழவழ சருமம் பெற.. என்ன செய்யலாம்?

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | |
ஸ்லீவ் லெஸ் மற்றும் ஷார்ட் ஸ்கர்ட் போன்ற உடைகளை அணியும் பெண்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பது கை, கால்களில் காணப்படும் அதிகப்படியான ரோமம். இப்படி உடலில் தேவையற்ற ரோமங்களை நீக்க வேக்சிங் நல்ல தேர்வாக இருக்கும். எகிப்திய பெண்கள் கூட அந்த காலத்தில் சிறிய ரோமங்களை நீக்க வேக்சிங் செய்ததாக கூறுவார்கள்.ஷேவிங் செய்யும் முறையும் இங்குள்ளது. ஆனால் இது சருமத்தில் நீண்ட
Lifestyle, beauty, tips waxing, hairremoval, லைப்ஸ்டைல், அழகு, அழகுகுறிப்பு, வேக்சிங்

ஸ்லீவ் லெஸ் மற்றும் ஷார்ட் ஸ்கர்ட் போன்ற உடைகளை அணியும் பெண்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பது கை, கால்களில் காணப்படும் அதிகப்படியான ரோமம். இப்படி உடலில் தேவையற்ற ரோமங்களை நீக்க வேக்சிங் நல்ல தேர்வாக இருக்கும். எகிப்திய பெண்கள் கூட அந்த காலத்தில் சிறிய ரோமங்களை நீக்க வேக்சிங் செய்ததாக கூறுவார்கள்.

ஷேவிங் செய்யும் முறையும் இங்குள்ளது. ஆனால் இது சருமத்தில் நீண்ட நேரம் எரிச்சலை உண்டாக்க வாய்ப்புண்டு. மேலும் ஷேவிங் செய்தால் சிறிது நாட்களிலேயே முடி திரும்ப வளரக்கூடும். ஆனால் வேக்சிங் முறையில் இந்த எரிச்சல் உணர்வு இருக்காது, திரும்பவும் முடி நாட்களாகும். அதனால் இம்முறையில் முடி நீக்குவதில் அதிக பலன் கிடைக்கும்.latest tamil newsவேக்சிங் முறை ரோமங்களின் ஆழம் வரை சென்று அகற்றுவதால் மீண்டும் வளர்வதற்கு குறைந்தது மூன்று வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் ஆகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அது ஒருவரது உடலில் இருக்கும் ரோம வளர்ச்சியை பொறுத்தது. மேலும் வேக்சிங் செய்வதால் சருமத்தில் இறந்த செல்களும் நீங்கி அந்த இடம் வழவழப்பாக மென்மையாக , மிருதுவாக காட்சியளிக்கிறது.


நீங்கள் முதல் முறை வேக்சிங் செய்வதாக இருந்தால் சுயமாக செய்யாமல் பியூட்டி பார்லர் சென்று செய்யவும். இதனால் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பன போன்ற ஆலோசனையும் பெற முடியும். முதலில் உங்களது சருமத்தின் வகையை அறியவேண்டும். அதை பொருத்தே நீங்கள் வேக்சிங் முறையை தேர்வு செய்ய வேண்டும்.


வேக்சிங் வகைகள்:


latest tamil news


வறட்சியான சருமம், எண்ணெய் சருமம், இரண்டும் கலந்த சருமம் என நமது சருமம் எந்த வகையை சேர்ந்தது என தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் கோல்ட் வேக்சிங், ஹாட்(Hot) வேக்சிங், ஸாஃப்ட் வேக்சிங், ஹார்ட் (Hard) வேக்சிங், பழ (Fruit) வேக்சிங், சாக்லெட் வேக்சிங், சுகர் வேக்சிங் என பல வகைகளில் வேக்சிங் உண்டு. உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு வேக்சிங் முறையை நீங்கள் பின்பற்றலாம்.


வேக்சிங் நன்மைகள்


* இதன் முதல் நன்மை மீண்டும் முடி வளர 3-8 வாரங்கள் வரை ஆகும். அது மட்டுமல்ல அவ்வாறு வளரும் முடியும் மென்மையானதாக இருக்கும்.

* இம்முறையில் வெட்டு காயங்கள் ஏற்படுவதில்லை. ஷேவிங் செய்யும் போது ஏற்படவாய்ப்புண்டு.

* சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பட்டு போல் இருக்க செய்யும்.

* குறிப்பாக தொடர்ந்து வேக்சிங் செய்வதால் முடியின் வளர்ச்சியை மட்டுப்படுத்தப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


சில குறைபாடுகளும் உண்டு


latest tamil news


* இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. நிரந்தரமாக உங்கள் முடி வளர்ச்சியை கட்டுபடுத்தாது.

* வேக்சிங் செய்கையில் துணியை அப்புறப்படுத்தும் போது, கடுமையான வலி தரும்.

* வேக்சிங் செய்யும் முறை கொஞ்சம் காஸ்ட்லிதான். ஷேவிங் முறை இதை விட விலை குறைந்ததே.

* ஷேவிங்கை விட வேக்சிங் செய்ய அதிக நேரம் எடுக்கும்.

* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாதவர்கள் வேக்சிங் செய்யக்கூடாது.

* மரு, முகப்பரு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஷேவிங் செய்யக்கூடாது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X