ஓட்டெடுப்பில் மஹாராஷ்டிரா அரசு வெற்றி: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 164 ஓட்டுகள்

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் தன் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார். மொத்தம் 288 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 144 ஓட்டுக்கள் தேவை என்ற நிலையில் ஷிண்டே 164 ஓட்டுக்கள் பெற்றார்.சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசுக்கு அவரது கட்சியிலேயே எம்எல்ஏ.,க்கள் விலகினர். ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் தன் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார். மொத்தம் 288 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 144 ஓட்டுக்கள் தேவை என்ற நிலையில் ஷிண்டே 164 ஓட்டுக்கள் பெற்றார்.



latest tamil news



சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசுக்கு அவரது கட்சியிலேயே எம்எல்ஏ.,க்கள் விலகினர். ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி மாறினர். இதை தொடர்ந்து பா.ஜ., ஆதரவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.


latest tamil news



இவரது ஆட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை உறுதி செய்ய இன்று ஓட்டெடுப்பு நடந்தது. இதில் எம்எல்ஏ.,க்கள் எழுந்து நின்று யாருக்கு ஆதரவு என தெரிவித்தனர். இந்த ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு எண்ணப்பட்டதில் ஷிண்டேவுக்கு ஆதரவாக 164 ஓட்டுக்கள் பதிவானது. அவருக்கு எதிராக 99 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். இதனையடுத்து ஷிண்டே தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
05-ஜூலை-202201:12:43 IST Report Abuse
Ramaswami Sampath வாடகைக்கு குடி இருக்கவந்தவன் வீட்டின் சொந்தக்காரனை காலி செய்யச் சொன்னதாக சரித்திரம் இருக்கிறதா? இது வரலாறு காணாத மோசடி. இதற்க்கு பின்புறம் எந்த கட்சி?
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202200:43:05 IST Report Abuse
Kalyan Singapore பாட்னவிஸ் முதல்வரானார் என்றால் எப்பொழுதும் ஷிண்டே அவரது ஆதரவை கைவிடலாம் அப்போது பி ஜே பி அரசும் கவிழ்ந்து விடும். பதவி அல்ல கட்சி தான் முக்கியம் என்று எப்போதும் பி ஜே பி உறுப்பினர்கள் நினைப்பதால் இப்போது உத்தவ் தாக்கரேயை பி ஜே பி உதவாக்கரை ஆக்கிவிட்டார்கள். அடுத்த தேர்தலில் பாட்னவிஸ் பெரும்பான்மையுடன் முதல்வர் ஆகி விடுவார்
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
04-ஜூலை-202219:44:30 IST Report Abuse
அன்பு பட்னாவிஸ் முதல்வர் ஆகியிருக்க வேண்டும். ஷிண்டே மஹாராஷ்ட்ராவை குட்டிச்சுவர் ஆகிவிடுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X