சிகரெட் புகைக்கும் காளி: பெண் சினிமா இயக்குனரின் கொடூர சிந்தனை: ஹிந்துக்கள் கொதிப்பு

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (131) | |
Advertisement
ஹிந்து கடவுளான காளிதேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டு, இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார் பெண் சினிமா இயக்குனர் லீனா மணிமேகலை.ஹிந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கோபப்படுத்தி வருகிறது. 'செங்கடல், மாடத்தி' ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது 'காளி' என்ற
Kaali, ArrestLeenaManimekalai, LeenaManimekalai, Hindus,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹிந்து கடவுளான காளிதேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டு, இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார் பெண் சினிமா இயக்குனர் லீனா மணிமேகலை.ஹிந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கோபப்படுத்தி வருகிறது. 'செங்கடல், மாடத்தி' ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது 'காளி' என்ற டாகுமென்டரி படம் ஒன்றின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். இப்படத்தை இயக்கி, காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் லீனா மணிமேகலை.அதில் 'காளி' தோற்றத்தில் ஒரு பெண் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து, லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.இது குறித்து லீனா மணி மேகலை கூறும்போது, “ஒரு மாலைப் பொழுது, கனடா நாட்டில் டோரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வருகிறார். அப்போது நடக்கும் சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai'' ஹேஷ்டேக் போடாம “love you leena manikemalai'' ஹேஷ்டேக் போடுவாங்க,” என தெரிவித்துள்ளார்.


latest tamil news

யார் கடிவாளம் போடுவது


விளக்கம் எல்லாம் சரித்தான். குறும்படமோ, பெரும் படமோ இல்லை ஆவணப்படமோ எதுவாக இருந்தாலும் சரி. பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கடவுள்களை ஏன் இப்படி சித்தரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வி. சமீபகாலமாக ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் விதமான இதுமாதிரியான கொடூர சிந்தினையுடன் படமெடுக்க சிலர் கிளம்பி வருகின்றனர். படத்தில் அது மாதிரியான காட்சிகள் வைத்து பப்ளிசிட்டி தேடி வருகின்றனர். இப்படியே சென்றால் சினிமா காட்சிகளுக்கு சென்சார் இருப்பது போன்று போஸ்டர் டிசைன்களுக்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் போலிருக்கிறது.சென்சார் செய்தால் உடனே படைப்பு சுதந்திரம் பறிபோய் விடுகிறது என்று ஒரு கூட்டம் நிச்சயம் குரல் கொடுக்கும். படைப்பு சுதந்திரம் அவசியமே ஆனால் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஒரு மதத்தை இழிவுப்படுத்துவது என்ன மாதிரியான சுதந்திரம். ஏற்கனவே நாட்டில் மதத்தை வைத்து நிறைய சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் இதுபோன்று போஸ்டரை வெளியிட்டு மேலும் சர்ச்சைக்கு வழிவகுக்கலாமா என ஹிந்து மதத்தவர் கேள்வி எழுப்புகின்றனர்.புகார்

ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் காளி தேவியை இழிவுப்படுத்தி புகைபிடிப்பது போல படம் வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலை உள்ளிட்ட திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் இந்துமுன்னணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் இந்துமுன்னணியினர் புகார் அளித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhamothara Kannan - Muscat,ஓமன்
05-ஜூலை-202210:31:20 IST Report Abuse
Dhamothara Kannan படைப்பளி என்பவர் உருவாக்கும் படைப்பானது அது மக்கலுக்கு ஒரு மைய கருத்தாகவோ இல்லை நல்ல பொழுது போக்கும் அம்சமாகவோ இருகுவேண்டுமா தவிர பிற மதத்தையோ அல்லது ஒரு குறிபிட்ட இனைதையோ இழிவு படுத்தி எடுப்பது படைப்பல்ல அது ப படைபாளி என்கிற அகங்காரம்.
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
05-ஜூலை-202209:26:18 IST Report Abuse
Vaduvooraan ஹிந்துக்கள் நல்லவங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க என்கிற அபிரிதமான நம்பிக்கையில்தான் இதெல்லாம் பல வருடங்களாக அரங்கேறி வருகின்றன. அசிங்கமான வாசகங்களுடன் ஹிந்துக்கோவில் வாசலில் வக்கிரமான சிந்தனை உள்ள தலைவர்களுக்கு சிலை வைத்தபோது வாய் திறக்கவில்லை.. ஊருக்கு ஊர் பிள்ளையார் சிலையை உடைத்தபோது எதிர்க்கவில்லை.. (சின்ன அண்ணாமலை மற்றும் ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதி, ம.போ.சி என்று ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர்), தெருவுக்கு தெரு ஆபாசபட்டிமன்றம் நடத்தியபோது அமைதியாக இருந்தது. ராமர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தியபோது கண்டுகொள்ளவில்லை..கம்பராமாயணத்தை ஆபாசமாக விமர்சித்து புத்தகம் எழுதியபோது அது கண்ணில் தென்படவில்லை..சேலத்தில் ஊர்வலம் நடந்தபோது துக்லக் பத்திரிகை தவிர வேறு ஒரு பத்திரிகை கூட அதை கண்டிக்கவில்லை..ஒரு இனத்தை சார்ந்த பெண்களை பொது உடைமையாக்கு என்று கரிய ,மனதோடு கரிய எழுத்துக்களில் பெரிசு பெரிசா எழுதியபோது அது பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை என்று சத்தமில்லாது இருந்தது... பின்னாட்களில் ஐயப்பன் அவதாரம் கந்தசஷ்டி கவசம், நடராஜர் என்று லிஸ்ட் போட்டு அசிங்கம் செய்ததபோது கூட சட்டை செய்யவில்லை..இன்று எல்லாவற்றுக்கும் வரிந்து கட்டிக கொண்டு வருகிற உச்ச நீதி மன்றம் கூட வாயடைத்து போயிருந்தது.. ஹிந்துக்கள் நல்லவங்க எவ்வ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க.. காரணம் ஜாதியை போல மதம் நமக்கு முக்கியமில்லை..அதுதான் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. சரியாய் இல்லையா?
Rate this:
Cancel
05-ஜூலை-202209:04:42 IST Report Abuse
venkat venkatesh no good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X