வணிகவியல் நீதிமன்றம் சேலத்தில் திறப்பு

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
''வணிகம் தொடர்பான வழக்குகளில், விரைவாக தீர்வு கண்டால், பன்னாட்டு நிறுவன முதலீடு தேடி வரும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, சேலத்தில் பேசினார்.சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 3.07 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, வணிகவியல் நீதிமன்றத்தை, நேற்று அவர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின், நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்


''வணிகம் தொடர்பான வழக்குகளில், விரைவாக தீர்வு கண்டால், பன்னாட்டு நிறுவன முதலீடு தேடி வரும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, சேலத்தில் பேசினார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 3.07 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, வணிகவியல் நீதிமன்றத்தை, நேற்று அவர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின், நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் அறைகளுக்கான கட்டுமானப்பணியை பார்வையிட்டு, மரக்கன்று நட்டார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் விழா நடந்தது. சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி வரவேற்றார். இதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமை வகித்து பேசியதாவது:
சேலத்தில் இரு வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அது முதன்மை நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் என, தனித்தனியே செயல்படும். இந்த வணிகவியல் நீதிமன்றம் வணிகர், மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மாவட்டமும் நம்பிக்கை பெறும் விதமாக செயல்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் தேவை. அதனால் வணிகம் தொடர்பான வழக்குகளில் விரைவாக தீர்வு கண்டால், பன்னாட்டு நிறுவன முதலீடுகள் தேடி வரும். அத்துடன் முதலீடு மீதான நம்பிக்கையை, வணிகவியல் நீதிமன்றம் ஏற்படுத்தும்.
சேலத்தில் வக்கீல்களுக்கு, 32 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 64 அறைகளுடன், இரண்டு மாடி கட்டடமாக கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பினால், அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முனீஷ்வர்நாத் பண்டாரி பேசினார்.
விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், சதீஷ்குமார், அப்துால் குத்துாஸ், இளந்திரையன், கலெக்டர் கார்மேகம், எஸ்.பி., ஸ்ரீஅபினவ், வக்கீல் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X