வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., மற்றும் ஷிண்டே தரப்பு கூட்டணி என்பது தற்காலிக ஏற்பாடு. அவர்களால் மக்களிடம் செல்ல முடியாது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த அரசுக்கு எதிராக சில சிவசேனா எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியதுடன், அசாமில் தஞ்சம் அடைந்தனர். பிற்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தற்போது ஆட்சி பொறுப்பேற்றது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்த புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கில் இன்று (ஜூலை 4) நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில், ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றிப்பெற்றது.

முன்னதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ., மற்றும் ஷிண்டே தரப்பு கூட்டணி என்பது தற்காலிக ஏற்பாடு. அவர்களால் மக்களிடம் செல்ல முடியாது. சிவசேனாவில் இருந்தபோது சிங்கங்களாக இருந்தனர். மும்பை தாக்குதல் பயங்கரவாதியான கசாப்புக்கு கூட அவ்வளவு பாதுகாப்பு இல்லை, ஆனால் அவர்கள் மும்பை சென்றபோது அதைவிட அதிக பாதுகாப்பு இருந்தது. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் சென்றதால் கட்சி பலவீனமடையாது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் பலமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.