பெரிய பதவி வேண்டாம்; ஒருங்கிணைந்த இந்தியாவே வேண்டும்: மம்தா

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
கோல்கட்டா: ‛எனக்கு பெரிய பதவி எதுவும் வேண்டாம், எனது நாட்டின் வளர்ச்சியில் மட்டுமே ஆர்வமாக உள்ளேன். எனக்கு ஒருங்கிணைந்த இந்தியா மட்டுமே வேண்டும்' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது: தற்போதைய அரசு மஹாராஷ்டிராவில்
WestBengal MamataBanerjee, Big Post, Want, United India, மேற்குவங்கம், முதல்வர், மம்தா பானர்ஜி, பெரிய பதவி, ஒருங்கிணைந்த இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: ‛எனக்கு பெரிய பதவி எதுவும் வேண்டாம், எனது நாட்டின் வளர்ச்சியில் மட்டுமே ஆர்வமாக உள்ளேன். எனக்கு ஒருங்கிணைந்த இந்தியா மட்டுமே வேண்டும்' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது: தற்போதைய அரசு மஹாராஷ்டிராவில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. அவர்கள் மஹா.,வில் வெல்லலாம், ஆனால் மக்களின் மனங்களை வெல்ல முடியாது. நான் பல அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இதுபோன்ற பழிவாங்கும் அரசை பார்த்ததில்லை. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களை புல்டோசரால் அகற்றலாம், ஜனநாயகத்தை அகற்றலாம். ஆனால் அடுத்த தேர்தலில் பா.ஜ.,வுக்கும் மக்களுக்குமான போட்டியில், மக்கள் ஜனநாயக முறைப்படி பா.ஜ.,வை அகற்றுவார்கள்.


latest tamil news


மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மாநிலங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அக்னிபத் திட்டத்தில் பயிற்சி பெற்று திரும்புபவர்களுக்கு மாநில அரசு வேலை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அப்படியெனில் 2024 தேர்தலுக்கு முன் ‛அக்னிபத்', நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ‛பை பை பத்'. 2024ல் மக்கள் அளிக்கும் ஓட்டு தேர்ந்தெடுக்கும் ஓட்டாக இல்லாமல், பா.ஜ.,வை நிராகரிக்கும் ஓட்டாக இருக்கும்.ஒருங்கிணைந்த இந்தியா


latest tamil news


2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் நம்மை (எதிர்க்கட்சிகளை) மன்னிக்க மாட்டார்கள். நாம் எந்த கட்சி அல்லது எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை மறந்துவிட வேண்டும். நாம் ஒன்றாக இருந்தால்தான் அதற்கான வாய்ப்பு இருக்கும். எனக்கு பெரிய பதவி எதுவும் வேண்டாம். எனது நாட்டின் வளர்ச்சியில் மட்டுமே ஆர்வமாக உள்ளேன். எனக்கு ஒருங்கிணைந்த இந்தியா மட்டுமே வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஜூலை-202221:10:38 IST Report Abuse
Ramesh Sargam ஒருங்கிணைந்த இந்தியா, அது நீ இருக்கும்வரையில் ஏட்பட வாய்ப்பே இல்லை.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
04-ஜூலை-202220:46:57 IST Report Abuse
BALU இந்தியா முழுவதுமே பங்களாதேசிகளை குடியமர்த்தி மே.வங்கத்தைப் போல மதவாதிகளின் நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்கி மே.வங்கத்தைப் போல உருப்படாமல் போகச் செய்யப் பார்க்கிறார் மம்தா பானர்ஜி.
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
04-ஜூலை-202220:34:22 IST Report Abuse
Davamani Arumuga Gounder .. எனக்கு பெரிய பதவி எதுவும் வேண்டாம். எனது நாட்டின் வளர்ச்சியில் மட்டுமே ஆர்வமாக உள்ளேன். எனக்கு ஒருங்கிணைந்த இந்தியா மட்டுமே வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்...இதை முதலில் உங்கள் கூட்டாளி .. விடியலுக்கு FAX. ..செய்யுங்கள்.. கூடவே அதனை படித்து சொல்வதற்கும் ஒரு ஆளை ஏற்பாடு செய்து விடுங்களேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X