” கச்சா எண்ணெய் 40 டாலராக குறைந்தால் மட்டுமே வரி ரத்து”

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 40 டாலராக குறைந்தால் மட்டுமே, ஏற்றுமதி பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி குறைக்கப்படுமென மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் இருப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த வாரம் ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், ஜெட் டீசல்
கச்சா எண்ணெய், ஏற்றுமதி, பெட்ரோல்,டீசல்,கூடுதல் வரி, Crude Oil, Petrol, Diesel, windfall tax,


கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 40 டாலராக குறைந்தால் மட்டுமே, ஏற்றுமதி பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி குறைக்கப்படுமென மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.



உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் இருப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த வாரம் ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், ஜெட் டீசல் லிட்டருக்கு ரூ.6, டீசல் லிட்டருக்கு ரூ.13 என கூடுதல் வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி, ஓ.என்.ஜி.சி, வேதாந்தா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும்.

இந்நிலையில் வரி விதிப்பு குறித்து வருவாய்த்துறை செயலர் தருண் பஜாஜ் பேட்டி ஒன்றில்,

சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, 15 நாட்களுக்கு ஒருமுறை வரிவிதிப்பு தொகை குறித்து மறு ஆய்வு செய்யப்படும். ஒருவேளை, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தால், கூடுதல் வரி விதிப்பு தொகை நிறுத்தப்படும். நிரந்தரமாக வரி விதிப்பு நீக்கப்படும். தற்போதுள்ள விலையில் இருந்து 40 அமெரிக்க டாலர் என்றளவுக்கு குறைந்தால் மட்டுமே நிறுத்தப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கான கூடுதல் வரி விதிப்பால் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்குமென்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.


latest tamil news



ஓபெக் கூட்டமைப்பு பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியை குறைத்தது, லிபியாவில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை, ரஷ்யா மீதான பொருளாதார தடை போன்றவற்றுக்கு மத்தியில், வினியோகம் குறைந்துள்ள சூழலில், உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றின் விலை 111 டாலராக சரிந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X