
*ஹை ஹீல்ஸ் காலணிகள் இன்றைய மார்டன் பெண்களின் ஆதர்ச சாய்ஸாக உள்ளது. ஆனால் இதனை முதலில் ஆண்களே அணிந்தனார். ஆம்..! 10ம் நுற்றாண்டில் ஆண்கள் குதிரை சவாரிக்கு ஷூ ஹீல்கள் உயரமாக இருந்தால் வசதியாக இருக்கும் என நினைத்தனர். எனவே குதிரை வைத்திருக்கும் ஆண்கள் ஹை ஹீல்ஸ் அணிந்தனர். 17ம் நூற்றாண்டு துவங்கி இது பெண்களின் பேஷனாக ஆக்சசரியாக மாறிவிட்டது.

*ஐநா., அமைப்பு கடந்த 2015-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கைப்படி உலகின் 700 கோடி மக்கள் தொகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த 250 கோடி குடிமக்கள் கழிப்பறை வசதி இன்றி அவதியுறுவதாக தகவல் வெளியிட்டது. ஆனால் இவர்களிடம்கூட செல்போன் உள்ளது. எனவே உலகில் கழிப்பறை இல்லாத குடிமக்கள் கூட செல்போன் பயனாளர்களாக உள்ளனர்.

*கிட்டப் பார்வை, தூரப்பார்வை கோளாறு உள்ளவர்கள் மூக்குக் கண்ணாடி அணிவர். மூக்கு கண்ணாடி மனிதர்களால் கடந்த 800 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் வயோதிகர்கள் சிறிய எழுத்துக்களைப் படிக்க பூதக்கண்ணாடி பயன்படுத்தினர். ஒவ்வொரு முறையும் இதனை கண் அருகே கொண்டு செல்ல சிரமமாக இருந்ததால் படிக்கும்போது பயன்படுத்த மூக்கு கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது.

*பண்டைய காலத்தில் பணம் கண்டிபிடிக்கப்படும் முன்னர் பண்ட மாற்று முறை மூலம் ஊழியர்களுக்கு மன்னர்கள் சம்பளம் வழங்கினர். ரோமானிய போர் வீரர்களுக்கு உப்பு சம்பளமாக வழங்கப்பட்டது. சமயலுக்கு அத்யாவசியப் உணவுப் பொருளாக விளங்கும் உப்பு எளிதில் பிறருக்கு விற்கக் கூடிய ஓர் பண்டமாகத் திகழ்ந்தது. உப்புக்கு ஆங்கிலத்தில் 'சால்ட்' என்று பெயர். மாத சம்பளத்தை குறிக்கும் ஆங்கில வார்த்தையான 'சேலரி' என்ற வார்த்தை சால்ட்-ல் இருந்தே பிறந்தது.

*ஐந்தாம் நூற்றாண்டிலேயே சீனாவில் விளைந்த உணவு தானியம் நெல். இதிலிருந்து கைக்குத்தல் அரிசி எடுக்கப்பட்டது. புல்லின் ஒரு வகையான நெல்தான் மனிதனின் ஆதிகால உணவுப் பண்டமாகக் கருதப்படுகிறது. இதனை அடுத்து 8ம் நூற்றாண்டில் மெக்ஸிகோ நாட்டில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. இது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

*நாய்களுக்கு நிறங்கள் தெரியாது என்ற வதந்தி பல ஆண்டுகளாக உலா வருகிறது. நாய்களின் கண் ரிசப்டார்கள் மஞ்சள், நீலம், வயலெட் ஆகிய நிறங்களைப் பார்க்க உதவும். மேலும் இருட்டில் பொருட்களைக் காணும் திறன் மனிதர்களைவிட நாய்களுக்கு அதிகம்.

*புதிய திரைப்படங்களின் டிரெய்லர்கள் இன்று யூடியூபில் வெளியாகின்றன. 20-30 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் ட்ரெய்லர்களை தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களின் கண்டு, கேட்டிருப்போம். ஆனால் 1950களின் ஹாலிவுட் டிரெய்லர்கள் படம் துவங்கும் முன்னர் திரையரங்கில் திரையிடப்படும். இது படம் குறித்த ஆவலை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும். ஆனால் 1913ம் ஆண்டு ட்ரெய்லர்கள் முதன்முதலில் திரையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இவை படம் முடிந்த பின்னர் திரையிடப்பட்டன. இதனால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா? படம் பார்த்து முடித்ததும் டிரெய்லரை காண்பதால் படம் பார்வையாளர்கள் மனதில் நன்கு பதியும் என அப்போது நம்பப்பட்டது.

*பார்பி டால்கள் பேஷன் டிசைனர்கள், குழந்தைகள், கார்ட்டூன் தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரபலமானது. முதல் பார்பி டால் 1959-ம் ஆண்டு மார்ச் 9 அன்று நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் ரூத் ஹாண்ட்லர் என்ற பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பொம்மையை மாதிரியாக வைத்து தயாரிக்கப்பட்ட பார்பியின் முழு பெயர் பார்பரா மில்லிசெண்ட் ராபர்ட். இது ரூத் ஹாண்ட்லரின் மகளின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

*கணினி கீபோர்டுகளின் எழுத்துகள் ஏன் மாறிமாறி அமைந்துள்ளன என நாம் நினைப்போம். தற்போது பயன்படுத்தப்படும் நவீன ஸ்மார்ட்போன்கள் வரை குவெர்டி கீபோர்டு என்கிற இந்த எழுத்து அமைப்பே பின்பற்றப்படுகிறது. தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகரிக்கவே இவ்வாறு எழுத்துகள் அமைந்துள்ளதாக நினைப்போம். ஆனால் தட்டச்சு செய்யும் வேகத்தை குறைக்கவே டைப் ரைட்டர்களில் குவெர்டி முறை பின்பற்றப்பட்டது என்றால் பலரால் நம்ப முடியாது. சரி, எதற்காக தட்டச்சு வேகத்தை குறைக்க வேண்டும்? விஷயம் இருக்கிறது. 18ம் நூற்றாண்டில் தட்டச்சு செய்பவர்கள் எழுத்துகள் வரிசையாக இருந்ததால் அதிவேகமாக குறிப்பிட்ட பத்தியை தட்டச்சு செய்தனர். அப்போது ஒரே நேரத்தில் பல தட்டச்சு ஆவணங்கள் ஆரம்ப கால கணினியில் பதியப்படவேண்டும். இவ்வாறு செய்ததால் கணினியில் வேகம் குறைந்து நெட்வொர்க் டிராஃபிக் உண்டானது. எனவே தட்டச்சு ஊழியர்கள் தட்டச்சு செய்யும் வேகத்தை குறைத்தால் ஆவணங்கள் கணினிக்கு வந்து சேரும் வேகம் குறையும். இதனால் எழுத்துகள் முன்னுக்குப்பின் முரணாக அமைந்த குவெர்டி தட்டச்சு டைப்ரைட்டர் இயந்திரங்கள் அறிமுகமாகின. விஞ்ஞானம் வளரவளர கணினி வேகம் அதிகரித்தது. ஆனால் கணினி கீபோட்டில் குவெர்டி தட்டச்சு முறையே பின்பற்றப்பட்டது. தற்போது குவெர்டி தட்டச்சு செய்வது சுலபமாகிவிட்டதால் நமது ஸ்மார்ட்போன்கள் வரை இதேமுறை பின்பற்றப்படுகிறது.

*எண்பதுகளில் இந்தியாவில் புகழ்பெற்ற கோலி சோடாக்கள் தற்போது மீண்டும் கடைகளின் கிடைக்கத் துவங்கியுள்ளன. இதன் கனமான பச்சை கண்ணாடி பாட்டில் வடிவமைப்பு குழந்தைப் பருவத்தில் நம்மில் பலரை கவர்ந்து இருக்கும். இதில் உள்ள கோலிகுண்டு எப்படி வெளியே வராமல் இருக்கிறது என நாம் வியந்து இருப்போம். சாதாரண தண்ணீரில் வாயு அடைத்து சோடா உருவாக்கப்பட்டது. இன்று ஜிஞ்ஜர், லெமன், ஆரஞ்சு என கோலி சோடாக்களில் பல ஃபிளேவர்கள் வந்துவிட்டன. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த கனமான பச்சை நிற கோலி சோடா பாட்டில்கள் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது இந்தியாவிலேயே இந்த பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன.