நீங்கள் அணியும் ஜீன்ஸ் குறித்த அறியாத் தகவல்கள்

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
நீல நிற டோர்ன் ஜீன், ஸ்லிம் ஃபிட் எலாஸ்டிக் ஜீன், ஜாகர் ஜீன், பூட் கட் ஜீன் என ஜீன்ஸ் பேண்ட்களில் பல ரகங்கள் வந்துவிட்டன. இந்தியாவில் முன்னணி வெளிநாட்டு செயின்கள் ஜீன்களை குறைந்த விலையில் விற்பதால் ஜீன்ஸ் பிரியர்கள் சமீப காலங்களில் அதிகரிக்கத் துவங்கிவிட்டனர். பதினெட்டு வயதான பதின்பருவத்தினர்முதல் நடுத்தர வயது ஆண்கள், பெண்கள், வயோதிகர்கள்வரை கிட்டத்தட்ட அனைவரும்
ஜீன்ஸ், நீல நிற ஜீன்ஸ், லீவைஸ் ஸ்ட்ராஸ், jean, levis jeans, denim jeans in india

நீல நிற டோர்ன் ஜீன், ஸ்லிம் ஃபிட் எலாஸ்டிக் ஜீன், ஜாகர் ஜீன், பூட் கட் ஜீன் என ஜீன்ஸ் பேண்ட்களில் பல ரகங்கள் வந்துவிட்டன. இந்தியாவில் முன்னணி வெளிநாட்டு செயின்கள் ஜீன்களை குறைந்த விலையில் விற்பதால் ஜீன்ஸ் பிரியர்கள் சமீப காலங்களில் அதிகரிக்கத் துவங்கிவிட்டனர். பதினெட்டு வயதான பதின்பருவத்தினர்முதல் நடுத்தர வயது ஆண்கள், பெண்கள், வயோதிகர்கள்வரை கிட்டத்தட்ட அனைவரும் ஜீன்ஸ், ஷர்ட்ஸ், ஜாக்கெட், ட்ரவுசர் என ஏதாவது ஒரு டெனிம் ஆடையை அணிய விரும்புகின்றனர். ஜீன்ஸ்-ன் வரலாறு மற்றும் அரியாத் தகவகளைத் தெரிந்துகொள்வேமே..!


latest tamil news



*18-ம் நூற்றாண்டில் லீவைஸ் ஸ்ட்ராஸ் என்ற அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் டெனிம் ஜீன்ஸ்-ஐ கண்டுபிடித்தார்.

*சுரங்கத் தொழிலாளர்களுக்கு கிழியாத கனமான ஆடை தயாரிக்க அவர் ஆய்வு மேற்கொண்டபோது ஜீன்ஸ்-ஐ உருவாக்கினார். இதன் ஓரங்கள் கிழியாமல் இருக்க ரிவிட் அடித்து ஜீன்ஸை உருவாக்கினார். இதுவே பின்னாட்களின் பேஷனாக மாறியது.

*ஜீன்ஸுக்கு இண்டிகோ டை பயன்படுகிறது. இது இந்தியாவில் தயாராகி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு செல்கிறது.


latest tamil news



*19-ம் நூற்றாண்டில் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் எதேச்சையாக கிழிந்த மாடல் ஜீன்ஸை அறிமுகப்படுத்த, அது ஜீன்ஸ் தயாரிப்பில் புதிய டிரெண்ட் உருவாக்கியது.

*ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மைக்கேல் ஜாக்ஸன்வரை பல பிரபலங்கள் ஜீன்ஸின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

*புளூ ஜீன்ஸ் ஆரஞ்சு நிற நூல் கொண்டு தைக்கப்படுகிறது. ரிவிட்-ஜீன்ஸ் கூட்டணிக்கு ஆரஞ்சு நிற நூல்தான் பொருந்துமென லீவைஸ் ஸ்ட்ராஸ் முடிவெடுத்தார். இது பின்னாட்களின் தனிகவனம் பெற்றது.


latest tamil news



*18-ம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்கள் நேரம் பார்க்க பாக்கெட் வாட்ச் பயன்படுத்தினர். கையில் அணியும் வாட்ச் அப்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் பாக்கெட் வாட்ச் வைக்க ஜீன்ஸில் குட்டி பாக்கெட் ஒன்று சேர்த்து தைக்கப்பட்டது.

*லீவைஸ் ஸ்ட்ராஸ், தான் உருவாக்கிய முதல் ஜீனுக்கு 'வெயிஸ்ட் ஓவரால்' என பெயர் சூட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X