ஜோலார்பேட்டை:ஜோலார்பேட்டை அருகே, கரடி தாக்கி முதியவர் படுகாயமடைந்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரியை சேர்ந்தவர், திருப்பதி, 65. இவர் ஏலகிரிமலையில் விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இன்று காலை 11:00 மணிக்கு விறகு வெட்ட ஏலகிரிமலை நான்காவது மலைப்பாதை வளைவில் நடந்து சென்ற போது, திடிரென கரடி தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அரரை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஏலகிரிமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பத்துார் வனத்துறையினரை கேட்டதற்கு, ஏலகிரிமலையில் 10 க்கும் மேற்பட்ட கரடிகள் வலம் வருவதாகவும், மக்கள் விறகு வெட்ட செல்ல வேண்டாம் என கூறினர்.
ஆந்திரா மாநிலம், சித்துார் வனப்பகுதியிலிருந்து வேலுார் மாவட்டம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளுக்கு 10 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் புகுந்து கடந்த ஒரு வாரத்தில் 20 ஆடுகளை அடித்துக் கொன்றதாக அப்பகுதி மக்கள் வனத்துறையில் புகார் செய்தனர்.
குடியாத்தம் வனத்துறையினர் சிறுத்தைகளில் கால்தடத்தை கொண்டு அதன் நடமாட்டத்தை கண்காணித்து அதனை விரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினர்.