சுதந்திர போராட்ட தியாகிகளின் கனவு இந்தியாவை உருவாக்குவோம்: ஆந்திராவில் மோடி பேச்சு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பீமாவரம்:''சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் குறிப்பிட்டசிலருக்கானது அல்ல. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற சுதந்திர போராட்டத் தியாகிகளின் கனவுகளை நிறைவேற்றுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீமாவரம்:''சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் குறிப்பிட்டசிலருக்கானது அல்ல. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற சுதந்திர போராட்டத் தியாகிகளின் கனவுகளை நிறைவேற்றுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.latest tamil newsஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி
நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லுாரி சீதாராம ராஜுவின், 125வது பிறந்தநாளையொட்டி, பெத்தாமிராமில், 30 அடி உயர வெண்கலச் சிலையை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாறு என்பது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் அல்லது
குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல.நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கும்
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம் உள்ளது. காடுகளின் தலைவர் என்றழைக்கப்படும்
அல்லுாரி சீதாராம ராஜு, ஆதிவாசி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடியவர்.அவரும், அவருடைய ஆதரவாளர்களும்ஆங்கிலேய அரசுக்குஎதிராக மிகவும் தீரத்துடன் போரிட்டனர்.
இவரைப் போன்ற லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தியாகிகள், இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டனர். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்,பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என, அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பது அவர்களுடைய கனவாகும்.

அவர்கள் விரும்பிய, கனவு கண்ட நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம். நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கனவுகளை நிறைவேற்றும் வகையிலேயே, கடந்த எட்டு ஆண்டாக மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil newsரோஜா 'செல்பி'

இந்த விழாவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சரான, பிரபல
நடிகர் சிரஞ்சீவி, மாநில கலாசார துறை அமைச்சரும், முன்னாள் நடிகையுமான ரோஜா
உள்ளிட்டோர். பங்கேற்றனர். விழா மேடையில் ரோஜா, பிரதமர் மோடியுடன், 'செல்பி' எடுத்துக் கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூலை-202205:21:45 IST Report Abuse
jeya kumar ....Ella eluthukkalum sundara telugu il ullathu. Not in Hindi..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X