'ஆடம்பர பொருட்கள் மீதான 28 சதவீத வரி தொடரும்'

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
புதுடில்லி:ஆடம்பர பொருட்கள்மீதான சரக்கு மற்றும் சேவை வரியை, 28 சதவீதமாக தொடரவே, அரசு விரும்புகிறது என்றும்; அதேசமயம், 5, 12 மற்றும் 18 சதவீதம்எனும் மூன்று வரி அடுக்குகளை, இரண்டு அடுக்காக குறைப்பது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும், வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:ஆடம்பர பொருட்கள் மீதான 28 சதவீத வரியை தொடரவே மத்திய
'ஆடம்பர பொருட்கள் மீதான 28 சதவீத வரி தொடரும்'

புதுடில்லி:ஆடம்பர பொருட்கள்மீதான சரக்கு மற்றும் சேவை வரியை, 28 சதவீதமாக தொடரவே, அரசு விரும்புகிறது என்றும்; அதேசமயம், 5, 12 மற்றும் 18 சதவீதம்எனும் மூன்று வரி அடுக்குகளை, இரண்டு அடுக்காக குறைப்பது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும், வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:ஆடம்பர பொருட்கள் மீதான 28 சதவீத வரியை தொடரவே மத்திய அரசு விரும்புகிறது.ஏனெனில், வருமான ஏற்ற - தாழ்வு அதிகம்இருக்கும் வளரும் பொருளாதாரத்தில், சில ஆடம்பர பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதை தடுக்க முடியாது.ஆனால், அதேசமயம் 5, 12,18 அடுக்குகளை, இரண்டு அடுக்காக குறைப்பது குறித்து, நாட்டின் வளர்ச்சிப் போக்கை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ஜி.எஸ்.டி., விகித கட்டமைப்புகள் எவ்வாறு உள்ளன, தற்போது உள்ளதை விட, அடுக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளதா போன்றவற்றை சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய நேரம் இது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X