'கோர்டெக்' பங்கு வெளியீடுஅனுமதி வழங்கியது 'செபி'

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
புதுடில்லி:'கோர்டெக் இன்டர்நேஷனல்' நிறுவனம், புதியபங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' வழங்கி உள்ளது.குழாய் பதிப்பில் ஈடுபட்டிருக்கும் கோர்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது பரிசீலனைக்குப் பின், செபி அனுமதி
'கோர்டெக்' பங்கு வெளியீடுஅனுமதி வழங்கியது 'செபி'

புதுடில்லி:'கோர்டெக் இன்டர்நேஷனல்' நிறுவனம், புதியபங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' வழங்கி உள்ளது.
குழாய் பதிப்பில் ஈடுபட்டிருக்கும் கோர்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது பரிசீலனைக்குப் பின், செபி அனுமதி வழங்கி உள்ளது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது 350 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் வசம் இருக்கும் 40 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
திரட்டப்படும் நிதியை கொண்டு கடன்களை அடைக்கவும், மூலதன செலவுகளுக்கும், புதிய சாதனங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்த உள்ளது.இந்நிறுவனம் குழாய் பதிப்பில், குறிப்பாக ஹைட்ரோகார்பன் குழாய் பதிப்பில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X