'டாடா' வசம் சென்ற அரசின் 2வது நிறுவனம்

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த, 'நீலாஜல் இஸ்பத் நிகாம்' நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை, முற்றுப்பெற்றது.இந்நிறுவனத்தை ஏலத்தில், டாடா குழுமத்தை சேர்ந்த டி.எஸ்.எல்.பி., எனும் 'டாடா ஸ்டீல் லாங் புராடெக்ட்ஸ்' கையகப்படுத்தியது.மத்திய அரசால், முழுமையாக தனியார்மயமாக்கப்பட்ட இரண்டாவது நிறுவனமாகும், நீலாஜல் இஸ்பத் நிகாம். இதற்கு முன்பாக, 'ஏர் இந்தியா'
'டாடா' வசம் சென்ற அரசின் 2வது நிறுவனம்

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த, 'நீலாஜல் இஸ்பத் நிகாம்' நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை, முற்றுப்பெற்றது.இந்நிறுவனத்தை ஏலத்தில், டாடா குழுமத்தை சேர்ந்த டி.எஸ்.எல்.பி., எனும் 'டாடா ஸ்டீல் லாங் புராடெக்ட்ஸ்' கையகப்படுத்தியது.
மத்திய அரசால், முழுமையாக தனியார்மயமாக்கப்பட்ட இரண்டாவது நிறுவனமாகும், நீலாஜல் இஸ்பத் நிகாம். இதற்கு முன்பாக, 'ஏர் இந்தியா' நிறுவனம் முழுமையாக தனியார்மயமாக்கப் பட்டது. இந்நிறுவனத்தையும் டாடா குழுமமே கையகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரியில் நடந்த ஏலத்தில், இந்நிறுவனத்தை 12 ஆயிரத்து, 100 கோடி ரூபாய்க்கு டி.எஸ்.எல்.பி., கையகப்படுத்தியது.

நீலாஜல் நிறுவனம், நான்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒடிசா மாநில அரசின் இரு நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும். இதில், எம்.எம்.டி.சி., நிறுவனம் அதிகபட்சமாக 49.78 சதவீத பங்குகளை வைத்திருந்தது.தற்போது ஒப்பந்தப்படி அனைத்து நடவடிக்கைகளும் முடிவு பெற்றதை அடுத்து, டாடா வசம் நீலாஜல் ஒப்படைக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X