என்னதான் செய்வாங்க? பணி உத்தரவு வழங்க இழுத்தடிப்பு

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட, குடிநீர் மேல்நிலை தொட்டிகளுக்கு, குழாய் பதிக்க பணி உத்தரவு வழங்காததால், மருதுார் ஊராட்சியில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.காரமடை அடுத்து மருதுார் ஊராட்சியில், குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. மேல்நிலைத் தொட்டிகள் கட்டி, மக்களுக்கு சீரான குடிநீர் சப்ளை செய்ய, ஊராட்சி

மேட்டுப்பாளையம்:கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட, குடிநீர் மேல்நிலை தொட்டிகளுக்கு, குழாய் பதிக்க பணி உத்தரவு வழங்காததால், மருதுார் ஊராட்சியில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.காரமடை அடுத்து மருதுார் ஊராட்சியில், குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. மேல்நிலைத் தொட்டிகள் கட்டி, மக்களுக்கு சீரான குடிநீர் சப்ளை செய்ய, ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மருதுார் பாலாஜி நகரில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியும், திம்மம்பாளையத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியும் கட்டி முடிக்கப்பட்டது.
இரண்டு குடிநீர் தொட்டிகள் கட்டி முடித்து, ஆறு மாதங்களுக்கு மேலாகிறது.மேல்நிலை தொட்டிகளில் இருந்து பகிர்மான குழாய் பதிக்க, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து, பணி உத்தரவு வழங்க வேண்டும். ஊராட்சியின் சார்பில் பலமுறை மனு அனுப்பியும், இதுவரை உத்தரவு பிறப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால் இரு இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டியும், பொது மக்களுக்கு பயனில்லாமல் வீணாக உள்ளது. எனவே உடனடியாக குழாய் பதிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X