ஆஸி.,யில் வெள்ளம்: 32 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
சிட்னி,-ஆஸ்திரேலியாவில் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சிட்னி நகரில் வசிக்கும் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 50 லட்சம் பேர் வசிக்கும் சிட்னி நகரம் கன மழையால் கடுமையாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிட்னி,-ஆஸ்திரேலியாவில் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சிட்னி நகரில் வசிக்கும் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



latest tamil news


ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 50 லட்சம் பேர் வசிக்கும் சிட்னி நகரம் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, சிட்னி நகருக்குள் புகுந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், நான்காவது முறையாக இது போன்ற வெள்ளம் சிட்னியை சூழ்ந்துள்ளது.


latest tamil news


வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.அத்துடன் மீட்புப் படையினர் வாயிலாக நுாற்றுக்கணக்கானோரை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று மழை குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X