இ-டெண்டர் முறையை கைவிட வேண்டும்: ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கடலுார்: ஊராட்சிப் பணிகளில் இ - டெண்டர் முறையை கைவிட வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.கடலுார் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், வரக்கால்பட்டில் நடந்தது. மாவட்டத் தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சுதா மணிரத்தினம், செயலர் ஜெயச்சந்திரன், பொருளர் ரவிக்குமார், அமைப்பு செயலாளர் தமிழ்வாணன்,
இ-டெண்டர் முறையை கைவிட வேண்டும்: ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்


கடலுார்: ஊராட்சிப் பணிகளில் இ - டெண்டர் முறையை கைவிட வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.கடலுார் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், வரக்கால்பட்டில் நடந்தது. மாவட்டத் தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார்.

கவுரவத் தலைவர் சுதா மணிரத்தினம், செயலர் ஜெயச்சந்திரன், பொருளர் ரவிக்குமார், அமைப்பு செயலாளர் தமிழ்வாணன், ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தற்போது அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 134 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தம் இ-டெண்டர் முறையில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையை கைவிட்டு ஊராட்சிகளின் மூலமாகவே ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்.மத்திய அரசின் திட்டங்களிலும் ரூ.20 லட்சத்திற்கு குறைவான பணிகளுக்கு ஊராட்சிகள் மூலமாகவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகளை நடத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலை, குடிநீர் வசதிகளுக்கான பணிகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். எந்தவிதமான விசாரணையும் இன்றி ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவு (203) நீக்க வேண்டும்.

100 நாள் வேலைத்திட்ட ஒதுக்கீட்டில் அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் ஆடு, மாடு கொட்டகைகள் வழங்குவதற்கான பயனாளிகளை ஊராட்சி தலைவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டரை சந்தித்து அளித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
05-ஜூலை-202210:17:33 IST Report Abuse
S.Ganesan ஈ-டெண்டர் மூலம் திருட்டுத்தனம் செய்ய முடியாது. சொந்தக்காரனுக்கு டெண்டர் கொடுக்க முடியாது. பினாமி பெயரில் காண்ட்ராக்ட் எடுக்க முடியாது. எனவே இவர்கள் தேரர்தலுக்காக செலவு செய்த காசு திரும்பி வராது. அடாவடியாக சொத்து சேர்க்க முடியாது. எல்லாம் கட்சி மேலிடத்திற்கு தெரியும். எனவே கள்ள வசூல் செய்ய முடியாது. மொத்தத்தில் ஆப்பு. எனவேதான் இவர்கள் இதை எதிர்க்கிறார்கள்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-ஜூலை-202207:03:55 IST Report Abuse
சீனி ரெளடிகளை வைத்து, டெண்டர் போட வருபவர்களை விரட்ட முடியாது. இ-டெண்டரில் பேப்பரை கிழித்து போட முடியாது, திருத்த முடியாது, எதுவும் குப்பைத்தொட்டிக்கு போகாது, திராவிட மாமன் மச்சான்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தேவையில்லாத பஞ்சாயத்துக்கள் மொத்தமா ராஜினாமா செய்துவிடலாம். டெண்டர் முதல், வேலைக்கு ஆள் எடுப்பது முதல், பிறப்பு இறப்பு சான்றிதழ் வரை ஆன்லைனில் பணம்கட்டி மனு போடும் முறை வந்தால், குறைந்தது உங்கள் பேப்பர் குப்பைத்தொட்டிக்கு போகாது. அதிகாரிகளும் போட்ட மனுவுக்கு பதில் சொல்லியாகிவேண்டும், எனவே தகிடுதத்தம் குறையும்.
Rate this:
Cancel
sivakumar - chennai,இந்தியா
05-ஜூலை-202206:45:42 IST Report Abuse
sivakumar திருட்டு பசங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X