அழகான பெண்களுக்கு அதிக சம்பளம்: வருத்தம் தெரிவித்தார் காந்திராஜன்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை--'அழகான பெண்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும்' என பேசியதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 'கல்லுாரி கனவு' என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில், வேடசந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசினார். 'அழகாக, அம்சமாக இருக்கும் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்' என்றார்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--'அழகான பெண்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும்' என பேசியதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.



latest tamil news


திண்டுக்கல்லில் நடந்த, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 'கல்லுாரி கனவு' என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில், வேடசந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசினார். 'அழகாக, அம்சமாக இருக்கும் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்' என்றார். அமைச்சர், கலெக்டர் முன்னிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., இப்படி பேசியது, பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ., மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், 'அழகு என்பது நிரந்தரமானது அல்ல. படிப்பும் திறமையும் தான் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும், அதிக சம்பளத்தையும் பெற்றுத்தருகிறது. எனவே, பெண்கள் குறித்து பேசியதை காந்திராஜன் திரும்பப் பெற வேண்டும். பெண்கள் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.இதையடுத்து, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் தலைவர்கள் வாசுகி, பாலபாரதி, காங்கிரசில் உள்ள பெண் தலைவர்களை தொடர்பு கொண்ட காந்திராஜன், 'நான் பேசியதை பெரிதுப்படுத்த வேண்டாம். தவறான நோக்கத்தில் பேசவில்லை' என, மன்னிப்பு கோரியுள்ளார்.


latest tamil news


அதைத் தொடர்ந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்னால் முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க., அரசுக்கும் அவப்பெயர் ஏற்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-ஜூலை-202209:18:15 IST Report Abuse
duruvasar கல்வெட்டில் பொரிக வேண்டிய கருத்தை துணிந்து பேசியதை இப்படி பொசுகுனு போட்டு சுக்குனுறா போட்டு ஓடசிடீங்கள்
Rate this:
Cancel
kumaresan - Petaling Jaya,மலேஷியா
05-ஜூலை-202208:21:42 IST Report Abuse
kumaresan அழகான பெண்களுக்கே அதிக சம்பளம் என்பதுவும் "திராவிட மாடல்" ஆட்சியின் ஒரு அம்சமாகும்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
05-ஜூலை-202207:46:13 IST Report Abuse
Balaji வாழ்வுதான் ஒரு சிலருக்கு மட்டும்.. என்னவேண்டுமானாழும் பேசி பிறகு மன்னிப்பு கேட்டு தப்பித்துக்கொள்கிறார்கள். ஜால்றா தமிழ் சேனல்கள் இதையெல்லாம் விவாதிப்பதே இல்லை. இதே ஒரு BJP தலைவர் இப்படி பேசி இருந்தால் ஒரு வாரம் வெச்சி செஞ்சிருப்பார்கள். டாஸ்மாக் மக்களும் கும்மி நடித்திருப்பார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X