சதுரங்க வீரர்களை வரவேற்கும் 'தம்பி'

Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை--மாமல்லபுரத்தில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தரும் சர்வதேச வீரர்களை வரவேற்கும் வகையில், 'தம்பி' எனப்படும் சதுரங்க குதிரை பொம்மைகள், சென்னை முழுவதும் வைக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 10ம் தேதி வரை, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன; பல நாடுகள் பங்கேற்கின்றன.
சதுரங்க வீரர்களை வரவேற்கும் 'தம்பி'

சென்னை--மாமல்லபுரத்தில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தரும் சர்வதேச வீரர்களை வரவேற்கும் வகையில், 'தம்பி' எனப்படும் சதுரங்க குதிரை பொம்மைகள், சென்னை முழுவதும் வைக்கப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 10ம் தேதி வரை, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன; பல நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இந்திய சதுரங்க கூட்டமைப்பு மற்றும் தமிழக சதுரங்க கழகங்கள் செய்து வருகின்றன.வீரர்களுக்கான தங்குமிடம், உணவு, விளையாட்டு மைதானம், சாலை, குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தர, 19 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழர்களின் ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம், அனைவரையும் நேசிக்கும் பண்பு ஆகியவற்றை, உலக சதுரங்க வீரர்களுக்கு உணர்த்த வேண்டும். அதைச் சொல்லும் சங்கப்பாடல் வரியான, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதைப் பிரதிபலிக்கும் வகையில், 'தம்பி' எனப் பெயரிடப்பட்ட சதுரங்க குதிரை வடிவத்தை, முதல்வர் ஸ்டாலின் வடிவமைக்கும்படி ஆலோசனை கூறினார்.

அதன் வடிவம், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலட்சினை, போட்டி நடக்கும் நாளை நினைவுபடுத்தும் 'கவுன்ட் டவுன்' சமிக்ஞை ஆகியவற்றை, கடந்த மாதம், சென்னை ரிப்பன் மாளிகையில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் வடிவமைத்த, வேட்டி கட்டிய சதுரங்க குதிரையான 'தம்பி' பொம்மைகள், சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட மக்கள் சந்திக்கும் முக்கியமான 100 இடங்களில் வைக்கப்பட்டு வருகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூலை-202210:49:06 IST Report Abuse
Thangarajan Kanagaraman உடன்பிறப்பு பொம்மை மாதிரி தான் இருக்கு.
Rate this:
Cancel
05-ஜூலை-202210:49:01 IST Report Abuse
Thangarajan Kanagaraman உடன்பிறப்பு பொம்மை மாதிரி தான் இருக்கு.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-ஜூலை-202207:27:50 IST Report Abuse
duruvasar எதாவது செய்து ராஜாவையும் ராணியையும் காப்பாதுங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X