10.39 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகளில் கொள்முதல்

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை,-நடப்பு சீசனில், காற்றாலைகளில் அதிக அளவாக, நேற்று முன்தினம் 10.39 கோடி யூனிட்டுகளை, மின் வாரியம் கொள்முதல் செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள், 8,618 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் யூனிட் 3.10 ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்கிறது. மே முதல் செப்., வரை காற்றாலை சீசன். ஒரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை,-நடப்பு சீசனில், காற்றாலைகளில் அதிக அளவாக, நேற்று முன்தினம் 10.39 கோடி யூனிட்டுகளை, மின் வாரியம் கொள்முதல் செய்துள்ளது.



latest tamil news


தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள், 8,618 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் யூனிட் 3.10 ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்கிறது. மே முதல் செப்., வரை காற்றாலை சீசன். ஒரு நாளில் ஒவ்வொரு நேரத்திலும் கிடைக்கும் மின்சாரம் மெகா வாட் அடிப்படையிலும்; நாள் முழுதும் கொள்முதல் செய்யப்படும் மின்சாரம், யூனிட்டுகள் அடிப்படையிலும் மின் வாரியம் கணக்கிடுகிறது

.கடந்த 2020 ஆக.,7ல் காற்றாலைகளில் இருந்து, 10.75 கோடி யூனிட்டுகள் மின்சாரம் கொள்முதல் செய்ததே இதுவரை உச்ச அளவாக உள்ளது. நடப்பு சீசனில் காற்று நன்கு வீசுவதால் தினமும் சராசரியாக, 8 கோடி யூனிட்டுகளுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் ஜூன் 30 மதியம் 2:00 மணிக்கு, 5,535 மெகா வாட் மின்சாரத்தை மின் வாரியம் கொள்முதல் செய்தது. இம்மாதம் 3ம் தேதி இரவு 7:30 மணி முதல் 8:00 மணி வரையிலான நேரத்தில், 5,689 மெகா வாட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அன்று முழுதும் காற்றாலைகளில், 10.39 கோடி யூனிட்டுகள் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.


latest tamil news


இதுவே, இந்த சீசனில் காற்றாலைகளில் இருந்து, மின் வாரியம் கொள்முதல் செய்ததில் அதிக அளவு.தமிழக மின் நுகர்வு, 3ம் தேதி 32.59 கோடி யூனிட்டுகளாக இருந்தது. அதை பூர்த்தி செய்ததில் காற்றாலை மின்சாரத்தின் பங்கு முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து, 10.17 கோடி யூனிட்டுகளுடன் மத்திய தொகுப்பு மின்சாரம் இரண்டாம் இடத்திலும்; 4.84 கோடி யூனிட்டுகளுடன் மின் வாரிய அனல் மின்சாரம் மூன்றாம் இடத்திலும் இருந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-ஜூலை-202208:59:43 IST Report Abuse
duruvasar Anil பாலாஜி காட்டுல மழையினு சொல்லுங்க.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
05-ஜூலை-202207:19:11 IST Report Abuse
John Miller சோலார் மின்சாரம் எவ்வளவு சாமி?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202206:07:06 IST Report Abuse
Mani . V இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் திமுக., அதிமுக அரசியல்வாதிகளுடையதுதானே? எப்படியோ கொள்ளையடித்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X