சுற்றுலா வாகனங்களில் எத்தனை சீட்? போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கோவை:சுற்றுலா வேன்களில், வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.சுற்றுலா வேன்களுக்கு தமிழகத்தில் 12 + 1 என்னும் அடிப்படையில் இருக்கை அமைக்க மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர்,'கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ளது போல, 19 +1 மற்றும் 14+ 1 என்ற அடிப்படையில், இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

கோவை:சுற்றுலா வேன்களில், வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.சுற்றுலா வேன்களுக்கு தமிழகத்தில் 12 + 1 என்னும் அடிப்படையில் இருக்கை அமைக்க மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர்,'கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ளது போல, 19 +1 மற்றும் 14+ 1 என்ற அடிப்படையில், இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி வழங்க வேண்டும்; அதற்கேற்ப இருக்கை வரியை செலுத்த தயாராக இருக்கிறோம்' என, தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.தமிழக அரசு, அண்டை மாநிலங்களில் சுற்றுலா வேன்களுக்கு வசூலிக்கப்படும் இருக்கை வரி மற்றும் ஆயுள்வரி மற்றும் வரிவிதிப்பு தொடர்பானஅறிக்கையை அனுப்பி வைக்க, போக்குவரத்துத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கோவைக்கு வரும் கேரள சுற்றுலா வாகனங்களில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து, வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக - கேரள எல்லை கோவையை ஒட்டி அமைந்துள்ளதால், வாளையாறு க.க.சாவடியில் சில மணி நேரம் ஆய்வு மேற்கொண்டோம். கேரள சுற்றுலா வாகனங்களில் அமைக்கப்பட்டுள்ள சீட் எண்ணிக்கை, வசூலிக்கப்படும் வரிவிபரங்களை சேகரித்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X