கோவை;ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின், 11ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நடந்தது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இளங்கலை பட்டம் மற்றும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கல்வி நிறுவன தலைவர் பெரியசாமி, தலைமை உரையாற்றினார். மருத்துவர்கள் செந்தில்குமார், பாலமுருகன், மற்றும் சுச்சரிதா சிறப்புரையாற்றினர். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் டாக்டர் கலியமூர்த்தி பேசுகையில்,பெண்களின் ஞானம், சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் நம் வாழ்வில் குடும்பம் மற்றும் பெற்றோரின் மதிப்பு பற்றி எடுத்துரைத்தார். மாணவர் சமூகம், டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை சுட்டிக்காட்டினார்.பிசியோதெரபி கல்லூரி முதல்வர் ஜெயபாரதி, நன்றி தெரிவித்தார்.