கோவை;கோல்டுவின்ஸ் அருகே பழமையான கோவிலை இடிக்க நடக்கும் முயற்சியை தடுக்க கோரி, பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.கோவை கோல்டுவின்ஸ்- வீரியம்பாளையம் ரோட்டில், நூற்றாண்டு பழமையான சுயம்பு தம்புரான் கோவில் உள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆகமவிதிப்படி, தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவிலை இடித்து அகற்றும் நோக்கத்துடன் சிலர் செயல்படுவதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும், நேற்று 100க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.ஊர் பொதுமக்கள் கூறுகையில், 'சுயலாபத்தை கருத்தில் கொண்டு, கோவில் இடிப்புக்கு முயற்சி நடக்கிறது. அரசு அதிகாரிகள் தலையிட்டு, கோவிலை பாதுகாக்க வேண்டும்' என்றனர்.
Advertisement