சென்னை-அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைதுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:ஜெயலலிதா அரசில் பொது மக்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும், எந்தவித பாதிப்புமின்றி செயல்பட்டு வந்த, மதுரை கப்பலுார் சுங்கச்சாவடி, தற்போது அனைத்து தரப்பினருக்கும், இடையூறாக செயல்பட்டு வருகிறது. அதை அகற்றக் கோரி, முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் எம்.எல்.ஏ.,வுமான உதயகுமார் அமைதியான முறையில் போராடினார். அவரையும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பனையும் கைது செய்த, தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். தி.மு.க., அரசின் அடக்குமுறை செயல்கள் குறித்து, தொலைபேசியில் உதயகுமாரிடம் விசாரித்தேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.