கோவை;சின்னவேடம்பட்டியில் உள்ள சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 'விப்ரோ', டி.சி.எஸ்., இன்போசிஸ், கேப்ஜெமினி, எச்.சி.எல்., அசென்ஜர், எம்.ஆர்.எப்., டிலோட்டி, பெடரல் வங்கி, ஜிபோ மற்றும் சி.டி.எஸ்., உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் பங்கேற்றன.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, எச்.சி.எல்., மண்டல தலைவர் ராமச்சந்திரனை, கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.விழாவில், சி.எம்.எஸ்., அறக்கட்டளை தலைவர் ராஜகோபால், செயலாளர் வேணுகோபால், துணைத் தலைவர் அசோக், துணை செயலாளர் கிரீசன், பொருளாளர் ரவிக்குமார் பங்கேற்றனர்.இந்த ஆண்டு படித்த மாணவர்களில், 95 சதவீத மாணவர்கள் முகாமில் வேலை வாய்ப்பு பெற்றனர். மேலும், 185 மாணவர்கள் கத்தார் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகவலை, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி அமர்நாத் தெரிவித்தார்.