கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு: 22 மணி நேரத்தில் பொள்ளாச்சி போலீஸ் அசத்தல்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி,-பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை, 22 மணி நேரத்துக்குள் மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்; இருவர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குமரன் நகரைச் சேர்ந்தவர் யூனீஸ், 28. இவரது மனைவி திவ்யா பாரதி, 25. இவருக்கு, கடந்த, 29ம் தேதி பிறந்த பெண் குழந்தை, நேற்று முன்தினம் அதிகாலை கடத்தப்பட்டது.மருத்துவமனையில் விசாரித்த போலீசார்,

பொள்ளாச்சி,-பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை, 22 மணி நேரத்துக்குள் மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்; இருவர் கைது செய்யப்பட்டனர்.



கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குமரன் நகரைச் சேர்ந்தவர் யூனீஸ், 28. இவரது மனைவி திவ்யா பாரதி, 25. இவருக்கு, கடந்த, 29ம் தேதி பிறந்த பெண் குழந்தை, நேற்று முன்தினம் அதிகாலை கடத்தப்பட்டது.மருத்துவமனையில் விசாரித்த போலீசார், அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால், வணிக வளாகங்களில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இரண்டு பெண்கள், குழந்தையை ஆட்டோவில் எடுத்துச் செல்வது தெரிந்தது.ஆட்டோவில் சென்ற பெண்கள், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், கோவை, உக்கடம் பஸ்சில் செல்வதும், உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன் சென்று, பாலக்காடு ரயிலில் பயணிப்பதையும் அறிந்தனர்.மேலும், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆட்டோவில், மஞ்சனுார் பள்ளி வாசல் அருகே சென்று, கொடுவாயூர் கிராமத்துக்கு சென்றதும் போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.



இதையடுத்து, சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் குழந்தையை போலீசார் மீட்டனர்.போலீசார் கூறியதாவது:குழந்தை கடத்தலில் ஈடுபட்ட, பாலக்காடு, கொடுவாயூரைச் சேர்ந்த ஜெமீனா, 34, மற்றும் 14 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஜெமீனாவுக்கு, மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்கின்றனர்.மணிகண்டன், வாரிசு வேண்டுமென கேட்டதால், ஜெமீனா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.



அவருக்கு வயிற்றில் கட்டி இருந்ததால், பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.இந்நிலையில், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், ஐ.சி.யு.,வில் வைத்து இருப்பதாகவும் மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார்.அந்த பொய்யை உண்மை என நிரூபிக்க, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்று, மணிகண்டனிடம் காட்ட முயற்சித்துள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினர்.கடத்தப்பட்ட குழந்தையை, 22 மணி நேரத்தில் மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெற்றோர், கண்ணீர் மல்க, போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X