நகராட்சி அதிகாரியைதாக்கியவருக்கு 'காப்பு!'

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
நாகப்பட்டினம்,-நாகையில், அலுவலகத்திற்குள் புகுந்து, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளரை கடுமையாக தாக்கிய முதியவரை, போலீசார் கைது செய்தனர்.நாகை, நகராட்சி அலுவலகத்தில், நகரமைப்பு ஆய்வாளராக பணியில் இருப்பவர் செல்வராஜ், 56. நேற்று பணியில் இருந்த போது, காடம்பாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 62, என்பவர், 2019ம் ஆண்டு தனக்கு சொந்தமான கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்த விபரம் குறித்து

நாகப்பட்டினம்,-நாகையில், அலுவலகத்திற்குள் புகுந்து, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளரை கடுமையாக தாக்கிய முதியவரை, போலீசார் கைது செய்தனர்.நாகை, நகராட்சி அலுவலகத்தில், நகரமைப்பு ஆய்வாளராக பணியில் இருப்பவர் செல்வராஜ், 56. நேற்று பணியில் இருந்த போது, காடம்பாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 62, என்பவர், 2019ம் ஆண்டு தனக்கு சொந்தமான கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்த விபரம் குறித்து கேட்டுள்ளார்.அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், சரமாரியாக செல்வராஜை தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த நகராட்சி ஊழியர்கள், படுகாயமடைந்த செல்வராஜை மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X