ஜெ., சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு: விடிய விடிய அ.தி.மு.க.,வினர் மறியல்

Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே, அனுமதியின்றி வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெ., சிலையை அகற்றியதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் நள்ளிரவு முதல் அதிகாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர், அண்ணா நகர் எல்லை பகுதியில், இரு மாதங்களுக்கு முன், தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை
ஜெ., சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு: விடிய விடிய அ.தி.மு.க.,வினர் மறியல்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே, அனுமதியின்றி வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெ., சிலையை அகற்றியதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் நள்ளிரவு முதல் அதிகாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர், அண்ணா நகர் எல்லை பகுதியில், இரு மாதங்களுக்கு முன், தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது.தொடர்ந்து, தொழுவந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே முன்னாள் முதல்வர் ஜெ., சிலையை அ.தி.மு.க.,வினர் நிறுவினர்.இரு சிலைகளும் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டதால், வருவாய்த் துறையினர் சிலைகளை துணியால் மூடி, 'சீல்' வைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த் துறையினர் முன்னாள் முதல்வர் ஜெ., சிலையை அகற்றினர்.அ.தி.மு.க., மாவட்ட செயலர் குமரகுரு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., உட்பட 50க்கும் மேற்பட்டோர் தொழுவந்தாங்கல் கிராமத்தில் நள்ளிரவு, 12:00 மணிக்கு திரண்டு, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அனுமதியின்றி அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் அகற்ற வலியுறுத்தி, தொழுவந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே, குமரகுரு தலைமையில் அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை வரை அ.தி.மு.க.,வினர் அப்பகுதியிலேயே அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்ததால், பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., பவித்ரா, தாசில்தார் பாண்டியன் மற்றும் வருவாய், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையும் அகற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததன் படி அதிகாலை, 5:00 மணிக்கு கலைந்தனர்.தொடர்ந்து காலை, 6:30 மணிக்கு தி.மு.க., நிர்வாகிகள் கருணாநிதி சிலையை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னிலையில் அகற்றினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-ஜூலை-202207:12:00 IST Report Abuse
duruvasar Tamizh இன தந்தை கருணாவுக்கே இந்த நிலமையா? dravidaa, ஸ்டாலினுக்குதான் விளம்பரம் பிடிக்காது. அவர் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
05-ஜூலை-202211:28:25 IST Report Abuse
rajaதமிழ் இந தந்தையான தமிழர்கள் இப்போ து உண்மை உணர தொடங்கிவிட்டார்கள் எவன் திருட்டு திராவிடன் என்று........
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-ஜூலை-202207:11:32 IST Report Abuse
வெகுளி மும்பை புயல் தற்போது தெலுங்கானாவில் இருக்கிறது... அது விரைவில் தமிழகத்தில் கரையை கடக்கும் போது மேலும் பல வெங்காய சிறகுகள் காற்றில் அடித்து செல்லப்படும்...
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-ஜூலை-202206:49:19 IST Report Abuse
சீனி பல் இல்லாத அதிகாரிகள், ஓரவஞ்சனை விடியல், இரண்டு சிலையையும் அப்புறப்படுத்தியிருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X