பெரியாறு அணையில் தொடர் மழை: நீர் திறப்பு அதிகரிப்பு: * மின் உற்பத்தியும் அதிகரித்தது

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கூடலுார்,- பெரியாறு அணையில் தொடர் மழையால் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1678 கனஅடியாக அதிகரிக்கப்பட்டதுடன், லோயர்கேம்பில் மின் உற்பத்தியும் அதிகரித்தது.நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 17.4 மி.மீ., பெரியாறில் 22 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 799 கனஅடியாக இருந்த நீர் வரத்து 1457 கனஅடியாக அதிகரித்தது. நீர் இருப்பு 4201

கூடலுார்,- பெரியாறு அணையில் தொடர் மழையால் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1678 கனஅடியாக அதிகரிக்கப்பட்டதுடன், லோயர்கேம்பில் மின் உற்பத்தியும் அதிகரித்தது.நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 17.4 மி.மீ., பெரியாறில் 22 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 799 கனஅடியாக இருந்த நீர் வரத்து 1457 கனஅடியாக அதிகரித்தது. நீர் இருப்பு 4201 மில்லியன் கன அடி. நீர்மட்டம் 127.70 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி).தமிழகப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடி மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டிருந்த ஆயிரம் கன அடி நீர் நேற்று காலையில் இருந்து 1678 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று பகல் முழுவதும் நீர் பிடிப்பு பகுதியில் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

மின்உற்பத்தி அதிகரிப்பு
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்களில் 90 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நேற்று முதல் நீர் திறப்பு 1678 கனஅடியாக அதிகரித்ததால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி 149 மெகாவாட்டாக அதிகரித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X