அரசு மருத்துவமனை ஊழியரை தாக்கியவருக்கு போலீஸ் வலை

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
புவனகிரி புவனகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியரை தாக்கியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், பத்தரக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்த பாலமுருகன் மகன் கணேஷ்,35; இவர் புவனகிரி தாலுகா அரசு மருத்துவமனையில் சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார்.அப்போது


புவனகிரி புவனகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியரை தாக்கியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், பத்தரக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்த பாலமுருகன் மகன் கணேஷ்,35; இவர் புவனகிரி தாலுகா அரசு மருத்துவமனையில் சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார்.அப்போது மேல்புவனகிரி சுவிகார எடத்தெரு ஜெயராமன் மகன் சவுந்தரராஜன் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார். அவரை கணேஷ் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்.அவருடன் வந்த அதேப்பகுதியைச் சேர்ந்த பிரகாஜ் மகன் திவாகர், கணேைஷ ஆபாசமாக திட்டி, தாக்கியதுடன் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.அரசு மருத்துவமனையின் உதவி மருத்துவர் அருள்மணி புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து திவாகரை தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X