பொதுப்பணித்துறை பதிவில் இல்லாததால் பராமரிப்பின்றி பாழாகும் கண்மாய்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
மேலுார் : கொட்டக்குடியில் பெரியாறு கால்வாய் தண்ணீர் பாயும் கண்மாயை பொதுப்பணித்துறையினர் கணக்கில் பதிவு செய்யாததால் 50 ஏக்கருக்கு மேல் தரிசாகும் அவலம் நிலவுகிறது.கொட்டக்குடியில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள கவராயன் கண்மாயானது, பெரியாறு 6 சி கால்வாய் 4 வது மடை வழியாக தண்ணீர் நிரம்பி அதன் மூலம் 50 ஏக்கருக்கு மேல் பயன் பெறும். வருவாய்த்துறை கணக்கில் குறிப்பிடப்படும்
பொதுப்பணித்துறை பதிவில் இல்லாததால் பராமரிப்பின்றி பாழாகும் கண்மாய்

மேலுார் : கொட்டக்குடியில் பெரியாறு கால்வாய் தண்ணீர் பாயும் கண்மாயை பொதுப்பணித்துறையினர் கணக்கில் பதிவு செய்யாததால் 50 ஏக்கருக்கு மேல் தரிசாகும் அவலம் நிலவுகிறது.

கொட்டக்குடியில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள கவராயன் கண்மாயானது, பெரியாறு 6 சி கால்வாய் 4 வது மடை வழியாக தண்ணீர் நிரம்பி அதன் மூலம் 50 ஏக்கருக்கு மேல் பயன் பெறும். வருவாய்த்துறை கணக்கில் குறிப்பிடப்படும் இக்கண்மாய் மற்றும் நிலங்கள் பொதுப்பணித்துறையினரின் கணக்கில் பதிவு பெறவில்லை.

விவசாய சங்க செயலாளர் ரவி கூறியதாவது: பொதுப்பணித்துறையினர் கண்மாய் கணக்கில் இதனை பதிவு செய்யாததால் நிதி கிடைக்காமல் பராமரிக்க மறுக்கின்றனர். அதனால் முட்புதர் அடர்ந்து மடை பழுதாகி விட்டது. கண்மாய்க்கு கடந்தாண்டு வரை தண்ணீர் வந்தும், பராமரிப்பு இல்லாததால் வீணாக வெளியேறுகிறது. அதனால் 50 ஏக்கர் நிலம் தரிசாகும் அவலம் உள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் 2 ஆண்டுகளாக மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

செயற்பொறியாளர் பவளகண்ணன் கூறுகையில், ''கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X