டோல்கேட்டில் திடீர் உண்ணாவிரதம்; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
திருமங்கலம் : கப்பலுார் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், 2 ஆண்டுகளுக்குரிய கட்டணத்தை செலுத்த நோட்டீஸ் அனுப்பியதை திரும்ப பெறவும் வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அவர் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.உதயகுமார் கூறியதாவது: 2009ல் தி.மு.க., காங்., ஆட்சியில் இங்கு டோல்கேட்
டோல்கேட்டில் திடீர் உண்ணாவிரதம்; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

திருமங்கலம் : கப்பலுார் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், 2 ஆண்டுகளுக்குரிய கட்டணத்தை செலுத்த நோட்டீஸ் அனுப்பியதை திரும்ப பெறவும் வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அவர் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

உதயகுமார் கூறியதாவது: 2009ல் தி.மு.க., காங்., ஆட்சியில் இங்கு டோல்கேட் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் டோல்கேட்டை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2021ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஆட்சிக்கு வந்ததும் இந்த டோல்கேட் உடனடியாக அகற்றப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் அவர் அறிவிப்பு கானல் நீராக மட்டுமே உள்ளது.

தற்போது மத்திய அரசு 60 கி.மீ., துாரத்திற்கு இடைப்பட்ட டோல்கேட்டை அகற்ற வாய்ப்பு அளித்தும் தி.மு.க., அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. டோல்கேட்டை பயன்படுத்தியதற்கு மொத்தமாக கட்டணங்களை செலுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த டோல்கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் அன்பழகன், சிட்கோ உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா, சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் செல்வம், பொருளாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X