கடலுார் : கடலுார் அருகே காஸ் கம்பெனி அமைப்பது தொடர்பான பேச்சுவார்ததை தோல்வியில் முடிந்தது.கடலுார் அருகே குடிகாட்டில் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் தனியார்கியாஸ் நிறுவனம் அமைவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அந்த நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, கலெக்டரிடம் மனுஅளித்தனர்.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை கூட்டம், கடலுார் ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு தலைமையில் அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்டது.துணைதாசில்தார் அசோகன், வி.ஏ.ஓ., வேதவள்ளி, தனியார்நிறுவன அலுவலர் ஸ்டாலின், ஊர் மக்கள் சார்பில் வி.சி.,கட்சி வழக்கறிஞர் ஜவகர் சுபாஷ், மாறன், அருள்ஜோதி,மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தனியார் நிறுவனம் காஸ் பிளாண்ட்டை வேறு இடத்திற்கு மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை உடன்படாமல் முடிந்தது. மீண்டும் மற்றொரு நாளில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.