புதுச்சத்திரத்தில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கடலூர்,: அரசு இடத்தில் போடப்பட்ட கொட்டகையை அகற்றிய, அரசு அதிகாரிகளை கண்டித்து நடந்த சாலை மறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சிதம்பரம் அடுத்த தோப்பிருப்பு மற்றும் பஞ்சங்குப்பம் பகுதியில் உள்ள வக்பு வாரிய இடத்தில் சுமார் 30 ஆண்டுகளாக, அந்த பகுதியைச் சேர்ந்தோர் 40 வீடுகள் கட்டிக்கொண்டு மாதம் 150 ரூபாய் வாடகையில் வசித்து வருகின்றனர்.இந்த இடத்தில்


கடலூர்,: அரசு இடத்தில் போடப்பட்ட கொட்டகையை அகற்றிய, அரசு அதிகாரிகளை கண்டித்து நடந்த சாலை மறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சிதம்பரம் அடுத்த தோப்பிருப்பு மற்றும் பஞ்சங்குப்பம் பகுதியில் உள்ள வக்பு வாரிய இடத்தில் சுமார் 30 ஆண்டுகளாக, அந்த பகுதியைச் சேர்ந்தோர் 40 வீடுகள் கட்டிக்கொண்டு மாதம் 150 ரூபாய் வாடகையில் வசித்து வருகின்றனர்.

இந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு மின்வசதி, குடிநீர்வசதி இல்லாமல், இங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இது குறித்து இங்கு வசிக்கும் மக்கள் மாற்று இடம் கேட்டு, அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் அரசு சார்பில், இலவச மனைபட்டா வழங்கவில்லை.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோப்பிருப்பு பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில், வக்புவாரிய இடத்தில் வசிக்கும் சுமார் 15 பேர் கீற்று கொட்டகை அமைத்தனர்.

இந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் நேற்று அகற்றினர்.இதனை கண்டித்து தோப்பிருப்பு பகுதியைச் சேர்ந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X