ஹிந்துக்களை இழிவுபடுத்தும் கட்சிக்கு ஓட்டு போடக்கூடாது: காடேஸ்வரா சுப்பிரமணியம்

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஹிந்துமுன்னணி சார்பில் ஹிந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டபொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாநில இணை அமைப்பாளர் ராஜேஸ் முன்னிலை வகித்தனர்.காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது: ஹிந்துக்களின் கோயில் நிலங்களில் பிற மதத்தினர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
Kadeswara Subramaniam, Hindu Munnani, DMK, காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்துக்களின் உரிமை மீட்பு பயணம்,ஹிந்து முன்னணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஹிந்துமுன்னணி சார்பில் ஹிந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டபொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாநில இணை அமைப்பாளர் ராஜேஸ் முன்னிலை வகித்தனர்.

காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது: ஹிந்துக்களின் கோயில் நிலங்களில் பிற மதத்தினர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். திண்டுக்கல்லில் எம்.எல்.ஏ., காந்திராஜன் அழகான பெண்களுக்கு சம்பளம் நிறைய கிடைக்கும், என பேசியது கண்டனத்திற்குரியது. தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி ஆகியோர் பெண்களை வர்ணித்து பேசியுள்ளனர்.


latest tamil newsஇதற்கெல்லாம் மேலாக வி.சி., திருமாவளவன், எங்கள் இளைஞர்களுக்கு சக்தி, திறமையுள்ளதால் கலப்பு திருமணம் செய்கின்றனர், என பேசுகிறார். எனவே, சுயநலமிக்க ஹிந்துக்கள் நம்மை இழிவுப்படுத்தும் கட்சிகளுக்கு ஓட்டு போடக் கூடாது, என்றார்.

மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், வீரபாண்டி, சேர்மன், ராமேஸ்வரம் மடம் மாதாஜி லட்சுமியம்மாள், பா.ஜ.,வினர், பூஜாரிகள் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
08-ஜூலை-202200:42:49 IST Report Abuse
Aarkay இந்துக்களுக்கு சூடு சுரணை கிடையாது.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
06-ஜூலை-202208:12:01 IST Report Abuse
Tamilan இந்துக்களே இந்துக்களை ஒழிப்பது அழிப்பது அரசின் துணையுடன் இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது என்பது இன்று ஆட்சியில் உள்ள பிஜேபியினருக்கே கைவந்த கலை . பின் இவர்கள் எப்படி மற்றவர்களை, மற்ற மதவாதிகளை கட்டுப்படுத்துவார்கள் ?.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
06-ஜூலை-202207:16:33 IST Report Abuse
ravi இந்துக்களில் நல்லவர்கள் என்பவர்கள் தங்களின் கொள்கையை விட்டுத்தராதவர்கள். காசுக்காக கொள்ளைஅடிப்பதற்காக ஊரை அடிச்சி உலையில் போடும் அரசியல்வாதிகளின் காலில் விழுந்து கொத்தடிமைகளாக இருப்பவர்கள் இந்துக்களாக இருந்தால் அவர்கள் கீழ்தரமானவர்கள். உண்மையாக நல்ல குடும்பத்தில் பிறந்த இந்துக்கள் எந்த காலத்திலும் திமுக கான்-கிராஸ் கம்யூனிஸ்ட்ஸ் சிறுத்தைகள் திரிணாமூல் போன்ற தேசவிரோத இந்துவிரோத கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X