போலீசாரை கண்டித்து திண்டுக்கல்லில்ேஷர் வேன் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
திண்டுக்கல் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரை கண்டித்து ேஷர் வேன் ஓட்டுனர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்முன்பு வாகனங்களை வரிசையாக நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: திண்டுக்கல்லில் நந்தவனப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.கே., நகர் உள்ளிட்ட பகுதியில் பயணிகளை ஏற்றி செல்ல 70 க்கு மேற்பட்ட ேஷர் வேன்கள் இயக்கப்படுகின்றன. இத் தொழிலை நம்பி

திண்டுக்கல் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரை கண்டித்து ேஷர் வேன் ஓட்டுனர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்முன்பு வாகனங்களை வரிசையாக நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறியதாவது: திண்டுக்கல்லில் நந்தவனப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.கே., நகர் உள்ளிட்ட பகுதியில் பயணிகளை ஏற்றி செல்ல 70 க்கு மேற்பட்ட ேஷர் வேன்கள் இயக்கப்படுகின்றன. இத் தொழிலை நம்பி 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உரிய காரணங்களை தெரிவிக்காமல் ஓட்டுநர்களிடம் ரூ. 500, 200 என அபராதம் வசூலிக்கிறார். கடன் வாங்கி வாகனங்களை இயக்கி வருகிறோம் .முறையான காரணங்களை தெரிவிக்காமல் இப்படி அபராதம் விதிப்பதால் குடும்பத்தை நடத்துவது சிரமாக உள்ளது ,என்றனர். இதை தொடர்ந்து போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X