கம்பம் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றுக்கு போட்டியிட தேர்வு

Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
கம்பம் : தேசிய தரச்சான்று பெறுவதற்கான போட்டியில் பங்குபெற கம்பம் அரசு மருத்துவமனை தேர்வு பெற்றுள்ளது. கம்பம் அரசு மருத்துவமனையில் சீமாங் சென்டர், ரத்த வங்கி, தீக்காய சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங் குழந்தை பராமரிப்பு பிரிவு, மூன்று ஆப்பரேஷன் தியேட்டர்கள் உள்ளன. இந்த மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற விண்ணப்பித்துள்ளது. அதற்கான தகுதி உள்ளதா என்பதை

கம்பம் : தேசிய தரச்சான்று பெறுவதற்கான போட்டியில் பங்குபெற கம்பம் அரசு மருத்துவமனை தேர்வு பெற்றுள்ளது. கம்பம் அரசு மருத்துவமனையில் சீமாங் சென்டர், ரத்த வங்கி, தீக்காய சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங் குழந்தை பராமரிப்பு பிரிவு, மூன்று ஆப்பரேஷன் தியேட்டர்கள் உள்ளன. இந்த மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற விண்ணப்பித்துள்ளது. அதற்கான தகுதி உள்ளதா என்பதை மாநில சுகாதார துறை சார்பில் டாக்டர்கள் நடராசன், ரமேஷ் ராஜா, நர்ஸ் கற்பகவல்லி அடங்கிய குழு ஆய்வு செய்தது.

தற்போது தேசிய தரச்சான்று பெற தகுதி பெற்றுள்ளதாக மாநில குழு அறிவித்துள்ளது. இனி தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்து, அதற்கான முடிவை அறிவிப்பார்கள். மருத்துவ அலுவலர் பொன்னரசன், "மாநில குழு தேசிய தரச்சான்றுக்கு செல்ல அனுமதி வழங்கிவிட்டது. இனி தேசிய குழுவினர் வர உள்ளனர். தேசிய தரச்சான்று கிடைத்தால், ஆண்டிற்கு ரூ 17 லட்சத்து 40 ஆயிரம் மத்திய அரசு வழங்கும். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இந்த தொகை கிடைக்கும். மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X